டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மன்மோகன் சிங் மீது எவ்வளவு நம்பிக்கை ப சிதம்பரத்துக்கு.. அவர் சொன்ன பிறந்தநாள் வாழ்த்தை பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படி தவறு?.. மன்மோகன்சிங் | Manmohan Singh about P chithambaram

    டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 89வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார சரிவுக்கு மன்மோகன் சிங் கூறும் தீர்வை மத்திய அரசு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். பொருளாதார நிபுணரான இவர், நாட்டில் புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்தினார்.

     p chidamabram birthday wishes to manmohan singh

    ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக்குழு துணைத்தலைவர், தலைமை பொருளாதார ஆலோசகர், மத்திய நிதியமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராகவும் இருந்து நாட்டை வழிநடத்தினார்.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் மன்மோகன் சிங்கிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் "நம்முடைய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அவருக்கு அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

    டெங்கு காய்ச்சலா..பாராசிட்டமல் போடுங்க..உத்தரகாண்ட் முதல்வரின் அலட்சியம்டெங்கு காய்ச்சலா..பாராசிட்டமல் போடுங்க..உத்தரகாண்ட் முதல்வரின் அலட்சியம்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ''எனக்காக எனது குடும்பத்தினர் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    பிறந்தநாள் கொண்டாடும் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேறுவதற்கான வழியை யாராவது காட்ட முடியும் என்றால்.. அது மன்மோகன் சிங்கால் தான் முடியும். மன்மோகன் சிங் கூறும் தீர்வை மத்திய அரசு கேட்க வேண்டும்.'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English summary
    "If anyone can show the way for the country to come out of the current economic slump, it is Dr Singh" p chidamabram birthday wishes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X