டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனசார வரவேற்கிறேன்.. பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புக்கு ப சிதம்பரம் பாராட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சி: குறைக்கப்படும் நிதி ஒதுக்கீடு..! மாநில அரசுகள் குரல் எழுப்ப சிதம்பரம் வேண்டுகோள்

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது சுதந்திர தின உரையில் வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    நாட்டின் 73வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    எங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை! பாக். ஷாக்எங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை! பாக். ஷாக்

    குடிநீர் பற்றாக்குறை

    குடிநீர் பற்றாக்குறை

    அவர் தனது உரையில், "மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு சிரமங்களுக்கு வழி வகுக்கிறது.வருங்கால தலைமுறைகளுக்கு புதிய சவால்களை உருவாக்குகிறது. குடிநீர் பற்றாக்குறை, வனஅழிப்பு, நிலச்சீர்கேடுகள், வீடுகள் இன்மை, ஏழ்மை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில மாநில அரசுகள் திட்டங்களை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. குடும்பங்களை சிறிய அளவில் வடிவமைத்து கொள்வது தேச பக்தி சார்ந்த செயல்" என்றார்.

    மக்களுக்கு வேண்டுகோள்

    மக்களுக்கு வேண்டுகோள்

    இதேபோல் மற்றொரு முக்கிய விஷயமாக வரும் காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர் நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ரசாயன பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வேண்டும் வலியுறுத்தினார்.

    மோடி சுதந்திர தின உரை

    மோடி சுதந்திர தின உரை

    மூன்றாவது அம்சமாக, செல்வந்தர்கள் மீது மத்திய அரசு அதிக வரி விதிப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது. செல்வத்தை உருவாக்குபவர்கள் மதிக்கப்பட வேண்டும். செல்வம் உருவாக்கப்பட்டால் தான் அதனை அனைவருக்கும் விநியோக்க முடியும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

    மனதார வரவேற்கிறேன்

    மனதார வரவேற்கிறேன்

    பிரதமர் மோடியின் இந்த மூன்று அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சிறிய குடும்பம் அமைத்தல், செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

    செல்வந்தர்களை மதித்தல்

    செல்வந்தர்களை மதித்தல்

    மேலும் இந்த மூன்று அறிவுரைகளில், நிதியமைச்சரும், அவருடைய துறை சார்ந்த வருவமான வரி அதிகாரிகளும். பிரதமரின் துறையின் கீழ் உள்ள விசாரணை அதிகாரிகளும் இரண்டாவது அறிவுரை ( செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல்) தெளிவாகவும் சத்தமாகவும் கேட்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்

    மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்

    மேலும் ப சிதம்பரம் கூறுகையில், முதல் அறிவுரை (மக்கள் தொகை கட்டுப்படுத்துதல்) மற்றும் மூன்றாவது அறிவுரை ( பிளாஸ்டிக் தடை) மக்கள் இயக்கங்களாக மாற வேண்டும். உள்ளூர் அளவில் ஏராளமான தன்னார்வர்கள் இயக்கமாக இந்த விஷயத்தை மேற்கொள்ள தயாராக உள்ளனர் என்றார்.

    English summary
    p chidambaram appreciated prime minister modi's 3 important announcement in independence day speech, like population explosion, eliminating single use plastic and respecting wealth creators.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X