டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்மலா வெங்காயம் சாப்பிடமாட்டாராம்.. அப்ப பட்டர் புரூட்டையா சாப்பிடுகிறார்?.. ப.சி. பொளேர் கேள்வி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் வெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - வீடியோ

    டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடாமல் அவர் பட்டர் புரூட்டை சாப்பிடுகிறாரா என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திகார் சிறையிலிருந்து ஜாமீனில் இருந்து நேற்று வெளியே வந்த ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.

    அவர் கண்டன பதாகைகளையும் அவர் கையில் வைத்திருந்தார். அதோடு இன்று கூட்டத்தொடரில் நடைபெறும் விவாதங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.

    திரும்பி வந்த ஒரே நாளில் தெறிக்க விடும் ப.சிதம்பரம்.. பொருளாதார மந்த நிலை குறித்து அதிரடி பேட்டி! திரும்பி வந்த ஒரே நாளில் தெறிக்க விடும் ப.சிதம்பரம்.. பொருளாதார மந்த நிலை குறித்து அதிரடி பேட்டி!

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ப சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெங்காய விலை குறித்த விவாதத்தின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் வெங்காயத்தை உட்கொள்வதில்லை.

    வெங்காயம், பூண்டு

    வெங்காயம், பூண்டு

    தான் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உட்கொள்ளாத குடும்பத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். வெங்காயத்தை சாப்பிட மாட்டார் என்றால் அவர் பட்டர் புரூட்டை சாப்பிடுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார் சிதம்பரம். மேலும் நாடாளுமன்றத்தில் எனது குரலை மத்திய அரசால் ஒடுக்க முடியாது என்றார்.

    செப்டம்பர் 5-இல்

    செப்டம்பர் 5-இல்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிபிஐ காவலில் இருந்த அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நிபந்தனை ஜாமீன்

    நிபந்தனை ஜாமீன்

    பின்னர் சிபிஐ வழக்கில் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் 106 நாட்களுக்கு பிறகு அவருக்கு நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் அவர் கலந்து கொண்டு பொருளாதாரம், வெங்காய விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Former Finance Minister P Chidambaram asks Nirmala doesnteat onions means what does she eat? Does she eat avocado?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X