டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டில் இனி 125 கோடி ஏழைகள்.. இது எப்படி இருக்கு.. ப.சிதம்பரம் யாரை கிண்டல் செய்கிறார் பாருங்க!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய தவறான விஷயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய தவறான விஷயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதா லோக் சபா, ராஜ்ய சபா இரண்டிலும் வெற்றிபெற்று, சட்டமாகி உள்ளது.

இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. வருடம் 8 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறக்கூடிய உயர் சாதியினர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

சிலர் எதிர்ப்பு

சிலர் எதிர்ப்பு

இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாகவே வாக்களித்து இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கேள்வி 1

இது தொடர்பாக ப.சிதம்பரம் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளார். முதலாவதாக, ''பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம் '' என்று கூறியுள்ளார். இந்த சட்டத்தின் வரையறையின்படி வருடம் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது எப்படி இருக்கு தெரியுமா?

மேலும் அவர் தனது அடுத்த டிவிட்டில், மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு!, என்றுள்ளார். அதன்படி ஏற்கனவே அரசு வகுத்த வருமான கோட்டிற்கான வரம்பிற்கு இதற்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது என்பதை கிண்டல் செய்து இருக்கிறார்.

ஏழை ஒதுக்கீடு

தனது கடைசி டிவிட்டில் ப.சிதம்பரம் ''ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றுள்ளார். இந்த டிவிட் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.

English summary
P. Chidambaram condemns 10% reservation for poorer sections of Upper Caste in his own style.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X