டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க இருந்து என்ன பயன்?.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில் உள்ள தவறு காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்சகட்ட பரபரப்பில் டெல்லி... ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில் உள்ள தவறு காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று ஐஎன்எக்ஸ் வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி ஹைகோர்ட் நிராகரித்தது.

    அதன்பின் வேகவேகமாக ப. சிதம்பரம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்காக முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

    இன்றும் இல்லை

    இன்றும் இல்லை

    இந்த நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா விசாரிக்க மறுத்துவிட்டார். உங்கள் மனுவில் நிறைய தவறு இருக்கிறது. அதனால் உங்கள் மனுவை பதிவாளர் இன்றைய லிஸ்டில் வைக்கவில்லை. அதனால் இன்று விசாரிக்க முடியாது.

    என்ன முடியாது

    என்ன முடியாது

    உங்கள் மனுவை சரி செய்து அதன்பின் தாக்கல் செய்க. நாளை அதை விசாரிக்கலாம் என்று கூறிவிட்டார். இதனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிட ப. சிதம்பரம் தரப்பு முடிவு செய்துள்ளது. அயோத்தி வழக்கில் விசாரணையில் இருந்த தலைமை நீதிபதி 6 மணிக்கு ப. சிதம்பரம் கோரிக்கையை பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலும் வழக்கு நாளைத்தான் விசாரிக்கப்படும் என்கிறார்கள்.

    இத்தனை பேர்

    இத்தனை பேர்

    இந்த வழக்கு கொஞ்சம் விசித்திரமாக சென்று கொண்டு இருக்கிறது. ஆம் ஐஎன்எக்ஸ் புகாரில் சிக்கி இருக்கும் ப. சிதம்பரம் மிக சிறப்பான வழக்கறிஞர். அதேபோல் அவருக்காக ஆஜராகும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் மிக முக்கியமான வழக்கறிஞர். இவர்கள் இருந்தும் கூட அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தவறு ஏற்பட்டுள்ளது.

    இப்படியா

    இப்படியா

    அது மட்டுமில்லாமல் சல்மான் குர்ஷித், அபிஷேக் மனு சிங்வி ஆகிய முக்கிய வழக்கறிஞர்களும் இந்த வழக்கில் கபில் சிபிலுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். இப்படி நான்கு முக்கியமான வழக்கறிஞர்கள் இருந்தும் கூட ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில் தவறு ஏற்பட்டு இருப்பதாக பதிவாளர் கூறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இந்த தவறு காரணமாக ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி பெரிய வழக்கறிஞர்கள் ஆஜராகி என்ன பயன், கடைசியில் ஜாமீன் மனு கூட சரியாக தாக்கல் செய்யவில்லையே என்று ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் கடிந்து கொண்டுள்ளனர்.

    English summary
    P.Chidambaram: Even 4 best advocates can't help another advocate in the INX Media case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X