டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே.. திகார் சிறையிலிருந்து "ப.சி." கேள்வி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் சார்பில் அவரது கணக்கில் இருந்து அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்து கடந்த 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    கேள்விகள்

    கேள்விகள்

    அப்போது அவர் எனக்கு பொருளாதாரத்தை பற்றி கவலையாக இருக்கிறது என்றார். இந்த நிலையில் தனக்கு பதிலாக தனது குடும்பத்தினர் தனது டுவிட்டர் கணக்கிலிருந்து கேள்விகளை கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.

    கைது

    கைது

    அதன்படி கடந்த 9-ஆம் தேதி அவரது டுவிட்டர் சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளனர். அதில் அவர் கூறுகையில் ஐஎன்எக்ஸ், ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் உங்களுக்கு பரிந்துரைத்த அதிகாரிகள் யாருமே ஏன் கைது செய்யப்படவில்லை. நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்கின்றனர்.

    பதிவு

    கடைசியாக கையெழுத்திட்ட ஒரே காரணத்தால் நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என பதிவிடப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினமும் ப.சிதம்பரம் சார்பில் அவரது டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியாகியுள்ளது.

    முதலீடு

    அதில் உங்களின் ஆதரவுக்கு எனது நன்றி. இந்திய பொருளாதார சரிவால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைவான வேலைவாய்ப்பு, குறைவான ஊதியம், குறைந்த முதலீடு, வர்த்தகம் குறைவால் ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே? என கேட்டுள்ளார்.

    English summary
    P.chidambaram's family tweets inbehalf of him that I am deeply concerned about the economy. The poor are the worst affected. Lower incomes, fewer jobs, less trade and lower investment affect the poor and the middle class. Where is the plan to get the country out of this decline and gloom?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X