டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: ப. சிதம்பரத்திற்கு 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் கோரிக்கை மனு மீதான விசாரணை இன்னும் சில நிமிடங்களில் உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரின் காவல் இன்றோடு முடிகிறது.

இதையடுத்து அவரது கஸ்டடியை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைக்க உள்ளது. இதே வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறையும் முயன்று வருகிறது. இதையடுத்து சிபிஐ நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ப. சிதம்பரம் சார்பாக ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க உள்ளது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

Newest First Oldest First
5:13 PM, 26 Aug

ப.சிதம்பரத்திற்கு மேலும் 4 நாள் சிபிஐ காவல் - டெல்லி சிபிஐ நீதிமன்றம்
5:13 PM, 26 Aug

ப. சிதம்பரத்திற்கு 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
5:12 PM, 26 Aug

ப. சிதம்பரத்திற்கு 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் - சிபிஐ
5:12 PM, 26 Aug

ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? : இன்னும் 30 நிமிடத்தில் உத்தரவு. டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் 30 நிமிடத்தில் உத்தரவு.
4:24 PM, 26 Aug

ப. சிதம்பரத்திற்கு 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும். சிபிஐ தரப்பு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை.
4:09 PM, 26 Aug

5 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரம் ஆஜர். காவலை நீட்டிக்கக்கோரி சிபிஐ தரப்பில் முறையிடப்பட உள்ளதாக தகவல்.
4:07 PM, 26 Aug

டெல்லி: சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மீண்டும் ஆஜர்
3:55 PM, 26 Aug

நாளை மதியம் 12 மணி வரை ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை. இன்றோடு தடை முடியும் நிலையில் நாளை மதியம் வரை தடை நீட்டிப்பு.
3:55 PM, 26 Aug

ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீட்டிப்பு - உச்ச நீதிமன்றம்
3:40 PM, 26 Aug

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சற்று நேரத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்
3:30 PM, 26 Aug

டெல்லி ஹைகோர்ட் நீதிபதி எப்படி ப. சிதம்பரம் தவறு செய்தார் என்று கூறலாம் - கபில் சிபல். எதை வைத்து அவர் பெயிலை மறுத்தார் ? - கபில் சிபல்.
3:30 PM, 26 Aug

நீங்கள் ஹைகோர்ட் நீதிபதியை விமர்சிக்க கூடாது - சிபிஐ தரப்பு
3:30 PM, 26 Aug

ஹைகோர்ட் நீதிபதி தனது மூளையை பயன்படுத்தவில்லை என்று நான் சொல்ல கூடாதா? - கபில் சிபல், நீங்கள் தனிப்பட்ட முறையில் யாரை குறித்தும் விமர்சிக்க கூடாது - சிபிஐ தரப்பு,
3:25 PM, 26 Aug

ஐஎன்எக்ஸ் வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது - கபில் சிபல் இனிமேல் ஏன் இதில் சிபிஐ காவலில் விசாரிக்க கேட்கிறது - கபில் சிபல் உள் விஷயங்களுக்காக சிபிஐ விசாரணை கேட்கிறது - சிபிஐ தரப்பு இன்னும் இதில் சில விஷயங்களை விசாரிக்க வேண்டும் - சிபிஐ
3:03 PM, 26 Aug

ஒரே நேரத்தில் இரண்டு வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது
3:00 PM, 26 Aug

ப. சிதம்பரத்திற்காக கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறார். சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்திற்காக அபிஷேக் மனு சிங்வி வாதிடுகிறார்.
2:59 PM, 26 Aug

டெல்லி சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை சற்று நேரத்தில் துவங்குகிறது. ப. சிதம்பரம் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணை.
2:52 PM, 26 Aug

ஆனால் சிபிஐ அதையும் மீறி அவரை கைது செய்துள்ளது. ஒருமுறை உங்களை கைது செய்துவிட்டால் உலகம் உங்களை தவறாக பார்க்கும். உங்களை எல்லோரும் குற்றவாளி போல பார்ப்பார்கள் - கபில் சிபல்.
2:51 PM, 26 Aug

ப. சிதம்பரத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று கைது செய்துள்ளனர். அவரின் கைது நடவடிக்கை நிகழ்ந்ததே அதை மனதில் வைத்துதான் - கபில் சிபல்.
2:50 PM, 26 Aug

ப. சிதம்பரத்திற்கு தெரியாமல் பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எந்த வழக்கிலும் இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது - கபில் சிபல்.
2:39 PM, 26 Aug

ப. சிதம்பரத்தை தவிர இந்த வழக்கில் எல்லோரும் பெயிலில் இருக்கிறார்கள்.சிலருக்கு அவர்கள் கேட்காமலே பெயில் வழங்கப்பட்டுள்ளது - கபில் சிபல்.
2:37 PM, 26 Aug

ப. சிதம்பரம் வழக்கு: கபில் சிபல் தனது வாதத்தை தொடர்கிறார். உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.
1:11 PM, 26 Aug

உணவு இடைவேளைக்காக ப. சிதம்பரம் வழக்கு ஒத்தி வைப்பு
1:08 PM, 26 Aug

வழக்கின் முழு விபரங்களை கபில் சிபல் தாக்கல் செய்து வருகிறார்
12:50 PM, 26 Aug

இதுதான் சிபிஐ விசாரணை நடத்திய லட்சணம் - கபில் சிபல்
12:50 PM, 26 Aug

சிதம்பரத்திடம் 17 வங்கி கணக்கு இருப்பதாக அமலாக்கத்துறை சொல்கிறது. ஆனால் சிதம்பரத்திடம் அது தொடர்பாக ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை - கபில் சிபல்.
12:49 PM, 26 Aug

சிதம்பரத்திடம் வங்கி கணக்குகள் குறித்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை . அவரிடம் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என்று மட்டும்தான் கேட்டுள்ளனர் - கபில் சிபல்
12:49 PM, 26 Aug

சிதம்பரத்திற்கு எதிராக இந்த வழக்கில் ஒரு ஆதாரம் காட்டுங்கள் - கபில் சிபல்
12:49 PM, 26 Aug

சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என் வழக்கை வாபஸ் பெறுகிறேன் - கபில் சிபல்
12:45 PM, 26 Aug

உச்ச நீதிமன்றத்தில் கேஸ் டைரியை ஆதாரமாக அளித்து இருக்கிறார்கள் - கபில் சிபல்
READ MORE

P Chidambaram get a bail appeal : Supreme Court to hear today- live updates
English summary
Former minister P Chidambaram bail appeal: Supreme Court to hear the plea today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X