டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக மோசமான பழிவாங்கும் நடவடிக்கை.. போலீஸ் ராஜ்யம்..ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்!

    டெல்லி: ப.சிதம்பரத்திற்கு எதிரான சிபிஐ நடவடிக்கைக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இதுவரை சிதம்பரம் இல்லத்துக்கு நான்கு முறை சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிதம்பரம் இல்லை.

    P.Chidambaram: India witnesses worst kind of virulent vendetta by Modi- Congress

    இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித்திடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர். "சிபிஐ நடவடிக்கை மிகவும் மோசம்" என்று அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, வெளியிட்ட ட்வீட்டில், போலீஸ் ராஜ்யத்தை, மோடி அரசு நடத்தி வருகிறது. இந்தியா தற்போது மிக மோசமான பழிவாங்கும் படலத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது. நீதிபதி 7 மாதங்களாக, தீர்ப்பை ஒத்திவைத்தார். ஓய்வு பெறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக தீர்ப்பு வழங்கியுள்ளார். முன்னாள் நிதியமைச்சரை வேட்டையாடுவதற்கு சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள். இது வாழைப்பழ குடியரசா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

    English summary
    Judge reserves judgement for 7 months & delivers it 72 hours before retirement, CBI/ED are sent to raid as a respected former FM is hounded. Banana Republic? asking Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X