டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் நாலாபுறமும் "கார்னர்" செய்யப்பட்ட ப.சிதம்பரம்.. சிறை செல்கிறார்.. அதிர்ச்சியில் காங்.!

Google Oneindia Tamil News

Recommended Video

    INX media case Update : P.Chidambaram's anticipatory bail

    டெல்லி: இன்று ஒரே நாளில் 4 வழக்குகளில் ஒரு வழக்கில் முன்ஜாமீன் கிடைத்த போதிலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால்

    நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவ்வப்போது மத்திய அரசின் பொருளாதார திட்டங்கள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் எப்போதுமே எதிர்த்து வந்த ப.சிதம்பரம், சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 21-ஆம் தேதி அதிரடியாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    தெறிக்கவிடும் டி.கே.சிவகுமார்.. அமலாக்கத்துறை பிடியில் இருந்தபடி, வெளியான வீடியோதெறிக்கவிடும் டி.கே.சிவகுமார்.. அமலாக்கத்துறை பிடியில் இருந்தபடி, வெளியான வீடியோ

    பரபரப்பு

    பரபரப்பு

    அவர் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட 4 வழக்குகளில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சிபிஐ, அமலாக்கத் துறை

    சிபிஐ, அமலாக்கத் துறை

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ஆகிய வழக்குகளில் ப.சிதம்பரமும் அவரது மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரமும் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்குகளை சிபிஐயும் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    இதில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் முன்ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இவர்களது முன்ஜாமீன் கிடைத்துள்ளது. அது போல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    சிதம்பரம்

    சிதம்பரம்

    மேலும் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கிலும் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அளித்த சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து உச்சநீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்ததை கருத்தில் கொண்டு சிபிஐ கைதுக்கு எதிரான மனுவை ப.சிதம்பரமே வாபஸ் பெற்றார். அத்துடன் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கில் சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    திகார் சிறை

    திகார் சிறை

    அப்போது ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை அழித்துவிடுவார் என சிபிஐ வாதம் செய்தது. ஆனால் சிதம்பரமோ எனக்கு எதிராக ஆதாரமே இல்லாத போது எதை நான் அழிக்க போகிறேன். நான் அமலாக்கத் துறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் என்னை நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார் ப.சி.

    நிராகரிப்பு

    நிராகரிப்பு

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷைனி சில நிமிடங்கள் குறித்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக கூறியிருந்தார். அதன் படி சுமார் 30 நிமிடங்கள் கழித்து நீதிமன்றம் கூடியது. அப்போது ஷைனி, ப.சிதம்பரத்தை வரும் 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தனக்கு 74 வயதாகிறது , தன்னை திகாருக்கு அனுப்ப வேண்டாம் என ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்தும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரே நாளில் 4 வழக்குகளில் ஒரு வழக்கில் மட்டும் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்ற ப.சி. தற்போது சிறையில் அடைக்கப்படுகிறார்.

    English summary
    Delhi is highly sensational today as P.chidambaram is going to be produced in Supreme Court and CBI Special Court for 4 different case. Whether he will get bail or will be sent to Tihar?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X