டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்கலோ சிக்கல்.. எப்படி சிக்கியுள்ளார் பாருங்க ப.சிதம்பரம்.. திகார் சிறைக்கு அனுப்ப வாய்ப்பு?

Google Oneindia Tamil News

Recommended Video

    INX media case Update : P.Chidambaram's anticipatory bail

    டெல்லி: கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம். என்றோ பதியப்பட்ட ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, தற்போது அவரது கழுத்தை சுற்றும் பாம்பாக மாறி விட்டது.

    ஆமாம்.. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வீட்டின் சுவரை ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தது முதல், இதுவரை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் பிடியில் தான் சிக்கி உள்ளார்.

    சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்த நிலையில், சிபிஐ கேட்டபடி அவரை கஸ்டடியில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    முன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்புமுன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்பு

    அமலாக்கத்துறை

    அமலாக்கத்துறை

    சிபிஐ பிடியில்,15 நாட்கள் விசாரணைக்கு பிறகு கண்டிப்பாக சிதம்பரம் வெளியே வருவார், என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சிபிஐ போலவே அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. அமலாக்கத் துறையும் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது.

    சரியான பாதை

    சரியான பாதை

    எனவே உச்சநீதிமன்றத்தில் ப சிதம்பரம் சார்பில், முன்ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த முன்ஜாமீன் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது என்றும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    திகார் ஜெயில்

    திகார் ஜெயில்

    எனவே சிபிஐ காவல் முடிவடைந்ததும், அமலாக்கத் துறை தனது காவலில் சிதம்பரத்தை எடுத்து விசாரிக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரை மீண்டும் கைது செய்ய தேவை இல்லை. அதற்கு பதிலாக ஒரு சிறை வாரண்ட் பிறப்பித்து சிதம்பரத்தை சிறையில் அடைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் சிதம்பரம் திகார் ஜெயிலில் அடைக்க படுவது உறுதி.

    சிக்கல்கள்

    சிக்கல்கள்

    இதுவரை இழுபறியாக இருந்த, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திடீரென வேகம் பிடித்து, அடுத்தடுத்து சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளார் சிதம்பரம். அனைத்து வாசல்களும் அவருக்கு, அடைக்கப்பட்டுள்ளன. சிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கியுள்ளார் சிதம்பரம் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

    English summary
    P Chidambaram, the former Union Finance Minister, is in serious trouble. The INX Media case, has now become a snake around his neck.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X