டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்க்கை ஒரு வட்டம்.. நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.. ப.சிதம்பரம் சிறை வைக்கப்பட்ட இடத்தை பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் சிறை வைக்கப்பட்ட இடத்தை பாருங்க- வீடியோ

    டெல்லி: வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்.. அது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விஷயத்தில் மிகவும் பொருந்திப் போகிறது. இல்லையா பின்ன?
    மத்திய உள்துறை அமைச்சராக பதவியில் இருந்தபோது தன்னால் திறந்து வைக்கப்பட்ட சிபிஐ தலைமையகத்திற்கு, தான் ஒரு கைதியாக கொண்டுவரப்படுவோம் என்பதை அவர் அப்போது நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டார்.

    ஆனால் வெறும் 8 வருடங்களில் அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. எப்படி இது நடந்தது என்று இன்னும் கூட அவருக்கே புரிந்திருக்காது.

    8 மணி நேர டாஸ்க்.. முக்கிய விஷயங்களை கறக்க திட்டம்.. ப. சிதம்பரத்திற்கு அதிகாரிகள் கிடுக்குப்பிடி 8 மணி நேர டாஸ்க்.. முக்கிய விஷயங்களை கறக்க திட்டம்.. ப. சிதம்பரத்திற்கு அதிகாரிகள் கிடுக்குப்பிடி

    இரவு கைது

    இரவு கைது

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அவரை கைது செய்த உடன், நேராக அழைத்து சென்ற இடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகம்.

    விசாரணை

    விசாரணை

    அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இரவு சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது தான், மூத்த பத்திரிகையாளர்கள் பலருக்கும், அடடே, இந்த கட்டிடம் சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது திறந்துவைத்த கட்டிடம் ஆயிற்றே என்ற நினைவு தட்டியது.

    கம்பீரமாக திறக்கப்பட்ட கட்டிடம்

    கம்பீரமாக திறக்கப்பட்ட கட்டிடம்

    ஆமாம். 2011 ஜூன் 30-ஆம் தேதி, அப்போது பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் கோலோச்சிய காலகட்டம் அது. சிபிஐக்கு புதிய கட்டிடம் தேவை என்பதால், ஒரு புதிய பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. மன்மோகன்சிங், மூத்த அமைச்சர்கள் வீரப்பமொய்லி, கபில் சிபல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நேரம் சரியில்லை

    தற்போது அந்த வீடியோ வைரலாக சுற்றிவருகிறது. யார் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், நேரம் காலம் சரியில்லை என்றால் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    English summary
    The then Union Home Minister, P Chidambaram at the inauguration of the new Central Bureau of Investigation (CBI) headquarters in Delhi on June 30, 2011. Chidambaram was arrested by CBI yesterday and brought to this complex.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X