டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல், பிரியங்காவை கைது செய்வதா? ஆயுதங்களையா கொண்டு போனாங்க? ப.சிதம்பரம் கடும் கோபம்!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை தரையில் தள்ளிவிட்ட உ. பி. போலீஸ்

    உத்தரப்பிரதேசத்தில் கொடூர பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்ட ஹத்ராஸ் தலித் பெண் குடும்பத்தை நேரில் சந்திக்க ராகுல், பிரியங்கா சென்றனர். ஆனால் அவர்களை உத்தரப்பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    P Chidambaram on Rahul, Priyanka Gandhi Arrested

    இதனால் சாலையில் நடந்து சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசார் ராகுல் காந்தியை கீழே பிடித்து தள்ளிவிட்டனர். இதில் ராகுல்காந்தி கீழே மண் தரையில் விழுந்து படுகாயமடைந்தார். இச்சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

    P Chidambaram on Rahul, Priyanka Gandhi Arrested

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் அமைதிவழியில் போராட்டம் நடத்த முயன்றதில் என்ன தவறு? பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கூடாதா?

    ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியாங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது? ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியாங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது?

    P Chidambaram on Rahul, Priyanka Gandhi Arrested

    இரு தலைவர்களும் வன்முறையிலா ஈடுபட்டனர்? அல்லது ஆயுதங்களை கொண்டு சென்றார்களா? அவர்களை ஏன் போலீஸ் தடுத்தது? ஏன் இரு தலைவர்களையும் போலீசார் கைது செய்யனும்? இரு தலைவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்யனும் என்கிற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

    English summary
    Former Union Minister P Chidambaram has condemned on arrest of Rahul, Priyanka Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X