டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா ஆக்கிரமிப்பு- உண்டு, இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை? வெளுக்கும் ப.சி.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய நிலப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு உண்டு- இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனா விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார் ப.சிதம்பரம். மோடியின் 5 ஆண்டு கால சீனா ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முடியுமா? என பாஜக தலைவர் ஜேபி நட்டாவை கேள்வி கேட்டிருந்தார் ப.சிதம்பரம்.

<span class=5 ஆண்டு- 2264 சீனா ஊடுருவல்கள்.. மோடியிடம் கேள்வி கேட்பீங்களா? நட்டாவுக்கு ப.சி. நச் கேள்வி" title="5 ஆண்டு- 2264 சீனா ஊடுருவல்கள்.. மோடியிடம் கேள்வி கேட்பீங்களா? நட்டாவுக்கு ப.சி. நச் கேள்வி" />5 ஆண்டு- 2264 சீனா ஊடுருவல்கள்.. மோடியிடம் கேள்வி கேட்பீங்களா? நட்டாவுக்கு ப.சி. நச் கேள்வி

P Chidambaram questions Centre on China incursions

சீனா ஊடுருவல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துகளை ஜேபி நட்டா விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிதம்பரம் கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

P Chidambaram questions Centre on China incursions

சீன துருப்புகள் இந்திய எல்லையைத் தாண்டி ஊடுருவியிருக்கிறார்களா, இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று கேட்டால் அரசு தரப்பில் சீறுகிறார்கள், ஏன்? ஆஹா, இது தேசத் துரோகம் என்று குதிக்கிறார்கள், ஏன்?

P Chidambaram questions Centre on China incursions

2004-2014 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது இதே கேள்விகளை பாஜக பல முறை கேட்டார்களே, மறந்துவிட்டதா? ஐ மு கூட்டணியின் சீனா கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார்களே, அதுவும் மறந்துவிட்டதா?

P Chidambaram questions Centre on China incursions

ஒவ்வொரு முறையும் நாங்கள் பதில் சொன்னோம். ஊடுருவல் முயற்சி நடந்தது, ஆனால் முறியடிக்கப்பட்டது, 2004-2014 இல் இந்திய நிலப்பகுதியில் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பதில் சொன்னோம். உண்டு, இல்லை என்று திரு மோடி அரசால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை?

இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Former Union minister P Chidambaram has questioned Centre on China incursions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X