டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி.. நன்றி சொல்லி ப.சிதம்பரம் போட்ட பரபரப்பு டுவிட்

Google Oneindia Tamil News

டெல்லி: பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் பண மோசடி தடுப்பு சட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ப சிதம்பரம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 நாட்களுக்கு மேலாக திஹார் சிறையில் இருக்கிறார். செப்டம்பர் 16ம் தேதி ப சிதம்பரத்திற்கு பிறந்த நாள் ஆகும். அன்றைய நாளில் ப சிதம்பரம் டெல்லி திஹார் சிறையிலே பொழுதை கழித்தார். இப்போதும் ப சிதம்பரம் சிறையில் தான் இருக்கிறார்.

p chidambaram reply on PM Modi sends birthday wishes letter to him

இந்நிலையல் ப சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் அவ்வப்போது டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் பிரதமர் மோடி அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தை இணைத்துள்ளதுடன் அதற்கு மேல், என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி என ப சிதம்பரம் கூறியுள்ளார்.

நிஜமாகவே ரஜினி கட்சி ஆரம்பிக்க போறார் போலயே.. பிரஷாந்த் கிஷோருடன் சந்திப்பு.. எப்போது அறிவிப்பு?நிஜமாகவே ரஜினி கட்சி ஆரம்பிக்க போறார் போலயே.. பிரஷாந்த் கிஷோருடன் சந்திப்பு.. எப்போது அறிவிப்பு?

இதேபோல் மற்றொரு பதிவில், பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் வெளியிட்ட மற்றொரு பதிவில் "தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என ப சிதம்பரம் கூறியுள்ளார்.

English summary
congress senior leader p chidambaram repley on PM Modi sends birthday wishes letter to him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X