டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட்டுக்கு எத்தனை மார்க் போடுவீங்க.. கேட்ட நிருபர்.. ப.சிதம்பரம் சொன்ன ஸ்டன்னிங் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு, 10க்கு, எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற நிருபர்கள் கேள்விக்கு டைமிங்காக ஒரு பதிலை சொல்லி அசத்தியுள்ளார், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்.

மத்திய பட்ஜெட்டை, கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இதன்பிறகு பல தலைவர்களும், பட்ஜெட் தொடர்பாக தங்கள் கருத்துக்களை கூறினர். செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரமும் தனது கருத்தை தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தத்தில், ஒவ்வொரு சீர்திருத்த யோசனையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக நிராகரித்துவிட்டார். அரசு பொருளாதார சீர்திருத்தங்களை நம்பவில்லை, கட்டமைப்பு சீர்திருத்தங்களில் நிச்சயமாக இவர்களுக்கு கவனம் இல்லை.

வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரியா? பட்ஜெட் என்ன சொல்கிறது.. நிர்மலா விளக்கம்! வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரியா? பட்ஜெட் என்ன சொல்கிறது.. நிர்மலா விளக்கம்!

பழைய திட்டம்

பழைய திட்டம்

பட்ஜெட் பழைய திட்டங்களின் சலவை பட்டியல் போல உள்ளது. மிகவும் விசுவாசமான பாஜக ஆதரவாளர் கூட பட்ஜெட் உரையில் எந்தவொரு திட்டத்தையும், கண்டறிந்து அதை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். செயல்படுத்தப்படும், திட்டங்கள் மக்களிடம் தோற்றுவிட்டபோது, அதே திட்டங்களுக்கு அதிக பணத்தை ஒதுக்குவது எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும்?

புதுப்பித்த பொருளாதாரம்

புதுப்பித்த பொருளாதாரம்

பொருளாதாரத்தை புதுப்பிக்க அல்லது வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்த, அல்லது தனியார் முதலீட்டை ஊக்குவிக்க அல்லது செயல்திறனை அதிகரிக்க அல்லது வேலை வாய்ப்புகளை உருவாக்க அல்லது உலக வர்த்தகத்தில் அதிக பங்கை பெறும் முயற்சியை அரசு கைவிட்டுள்ளது என்றுதான் நான் பார்க்கிறேன். அதற்கான எந்த நோக்கமும் பட்ஜெட்டில் இல்லை.

நிதியமைச்சர் மறுபரிசீலனை

நிதியமைச்சர் மறுபரிசீலனை

இந்தியப் பொருளாதாரம் முதலீட்டுப் பட்டினியால் தவிக்கிறது. இந்த சவாலை நிதியமைச்சர் ஒப்புக் கொள்ளவேயில்லை. நீங்கள் இப்படி ஒரு பட்ஜெட்டை கேட்கவில்லை, பாஜகவை ஆட்சிக்கு வரவைக்க வாக்களித்ததற்காகவே, இப்படியொரு பட்ஜெட்டை ஏற்க வேண்டியதும் அல்ல. ஆனால், 2019 ஆம் ஆண்டில் நடந்ததை போலவே, தனது பட்ஜெட் அறிவிப்புகளை, அரசு மறுபரிசீலனை செய்ய நிர்பந்திக்கப்படும். அதுவரை நீங்கள் இந்த பட்ஜெட்டுடன்தான், வாழ வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மதிப்பெண்

மதிப்பெண்

இதனிடையே, பட்ஜெட்டுக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் வழங்குவீர்கள் என்ற நிருபர்கள் கேள்விக்கு, 1 அல்லது 0 இரண்டும் 10ல்தான் உள்ளது. இதில் எந்த ஒரு நம்பரை நீங்கள் பட்ஜெட்டுக்கான மதிப்பெண்ணாக எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்சினை இல்லை. இவ்வாறு ப.சிதம்பரம் பதில் அளித்தார். அதாவது 1 அல்லது பூஜ்யம்தான், இந்த பட்ஜெட்டுக்கான மதிப்பெண் என்பது அவரது கருத்தாகும்.

English summary
When asked to rate the Budget on a scale of 1 to 10, P Chidambaram said, “Choose any number between 1 and 0... 10 has got a one and a zero, you can pick either and I’m okay.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X