Just In
ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ. 27 வரை நீட்டிப்பு- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நவம்பர் 27-ந் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் மீதான சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்திருக்கிறது. ஆனால் சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் தொடர்ந்தும் சிதம்பரம் சிறையில் இருக்கிறார்.

அமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்றுடன் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது.
இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை வரும் 27-ந் தேதி வரை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.