டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ப சிதம்பரம் பங்கேற்பது எப்போது.. அவரது மனைவி நளினி சிதம்பரம் பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: உடல்நலனை கவனித்துவிட்டு அதன் பிறகே ராஜ்யசபாவில் நிகழ்ச்சிகளில் தனது கணவர் ப சிதம்பரம் பங்கேற்பார் என அவரது மனைவி நளினி ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை இரவு 8 மணி அளவில் ப சிதம்பரம் திஹார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைப்பேசி வாயிலாக நளினி சிதம்பரம் பேட்டி அளித்தார்.

மாநிலங்களவை

மாநிலங்களவை

மூத்த வழக்கறிஞரான நளினி, தனது கணவருக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ப சிதம்பரம் உடல்நிலையை கவனித்துக்கொண்ட பிறகு அவர் மாநிலங்களவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளத் தொடங்குவார் என்றும் அவர் கூறினார்.

13ம்தேதி முடிகிறது

13ம்தேதி முடிகிறது

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13 ஆம் தேதி முடிவடைகிறது. எனவே அதற்கு ப சிதம்பரம் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வரவேற்பு

வரவேற்பு

முன்னதாக ப சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

அரசு சித்ரவதை

அரசு சித்ரவதை

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் காவலில் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ப.சிதம்பரத்தை 105 நாட்களுக்கு மேலாக மத்திய அரசு மனரீதியாக சித்திரவதை செய்ததாக ப சிதம்பரம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளியே வருவார்

வெளியே வருவார்

இந்த வழக்குகள் அவரை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்றும் அவர் மீது போட்டப்பட்ட வழக்குகளில் இருந்து சுத்தமாக வெளியே வருவார் என்பது உறுதி என்றும் இவை அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்குகள் என்றும் ப சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

English summary
P Chidambaram's wife Nalini said, P Chidambaram will attend Rajya Sabha after taking care of health
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X