டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன ஜிடிபி இது? சம்பந்தமே இல்லையே!.. இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்ற வேண்டும்.. ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடர்ந்து சரியும் இந்தியாவின் ஜிடிபி... முன்பே எச்சரித்த அபிஜித் பானர்ஜி

    டெல்லி: இந்திய பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ஜூலை முதல் செப்டம்பர் (அதாவது 2-ஆவது காலாண்டில்) வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி) 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த 6 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. சுங்கத் தொழில், விவசாயம், குறைந்த உற்பத்தி ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்டது 20 அடி உயர தீண்டாமை சுவர்: மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்டது 20 அடி உயர தீண்டாமை சுவர்: மு.க.ஸ்டாலின்

    விவரங்கள்

    விவரங்கள்

    ஜிடிபி குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சுட்டிக் காட்டி நாடாளுமன்றத்தில் பாஜகவின் எம்பி நிஷிகந்த் டூபே கூறுகையில் 5.5 சதவீதமாக உள்ள ஜிடிபி விரைவில் சரியாகிவிடும். மேலும் 1934-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பொருளாதாரம் குறித்த விவரங்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.

    கடவுள்தான்

    கடவுள்தான்

    இவரது கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் புதிய இந்தியாவில் இது போன்ற புதிய பொருளாதார நிபுணர்களிடம் இருந்து நம்மை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    குடும்பத்தார்

    குடும்பத்தார்

    திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சிறை சென்றபோது தனது சார்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன்படி அவரது குடும்பத்தாரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

    தனிநபர் வரி குறைக்கப்படும்

    தற்போது ஜிடிபி குறித்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளனர். அதில் ஜிடிபி விவரங்கள் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. தனிநபர் வரி குறைக்கப்படும். இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.

    5 சதவீதம்

    5 சதவீதம்

    இவையெல்லாம் பொருளாதாரத்தை சீர்திருத்துவதற்காக பாஜகவின் திட்டங்கள். இப்படியே போனால் இந்திய பொருளாதாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என அந்த ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் கடந்த ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த அவர் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதமாக குறைந்தது குறித்து 5 விரல்களை காட்டி கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former Finance Minister P.Chidambaram says that GDP numbers are irrelevant, personal tax will be cut, import duties will be increased. These are BJP’s ideas of reforms. God save India’s economy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X