டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெகாசஸ் நிபுணர் குழு.. மத்திய அரசின் சட்டவிதிமீறல்களை வெளிக் கொண்டு வரும்.. ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு சட்ட விதிமீறல்கள் வெளியே வரும் என்பது உறுதி என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஒட்டுக் கேட்கும் சாப்ட்வேரை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை என கூறப்படுகிறது. பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு! உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு!

நீதிபதிகள்

நீதிபதிகள்

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் அமர்வு முன் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற அமர்வு, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை ஏற்படுத்த விசாரணைக்கு உத்தரவிட்டது.

Recommended Video

    Pegasus உளவு விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
    தொழில்நுட்ப வளர்ச்சி

    தொழில்நுட்ப வளர்ச்சி

    மேலும் இந்தியாவின் ரகசியத்தை காப்பது மிகவும் முக்கியமானது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கியமானது. பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து மக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். சிறப்பு குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என அந்த அமர்வு தெரிவித்திருந்தது.

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    இதை எதிர்க்கட்சியினர் வரவேற்றிருந்தனர். இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட மூவர் குழுவில் உறுப்பினராக கோரும் போது நிறைய பேர் பண்பாகவும் நாகரீகமாகவும் நிராகரித்துவிட்டார்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவில் கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குடிமகன்

    குடிமகன்


    மனசாட்சியுள்ள எந்த ஒரு குடிமகனும் தேச நலன் சார்ந்த ஒரு விஷயத்தில் பணியாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் கோரிக்கையை நிராகரிக்க முடியுமா? பெகாசஸ் ஸ்பைவேர் எனும் ஒட்டுகேட்பு சாப்ட்வேர் இந்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது முதல் விஷயமாகும். இந்தியர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உச்சநீதிமன்ற உத்தரவின் இரண்டாவது விஷயமாகும்.

    ட்விட்டரில் ப சிதம்பரம்

    ட்விட்டரில் ப சிதம்பரம்

    சுப்ரீம் கோர்ட்டால் உத்தரவிடப்பட்ட நிபுணர்கள் குழுவால் மத்திய அரசின் பல்வேறு சட்ட விதிமீறல்கள் வெளியே வரும் என நான் நம்புகிறேன். சுதந்திரத்தை விரும்பும் அனைத்து மக்களும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறார்கள் என ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

    English summary
    Former Finance Minister P.Chidambaram says that he was shocked on hearing that many persons politely declining to the part of Pegasus probe panel which was set up by SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X