டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு

Google Oneindia Tamil News

Recommended Video

    SC grants bail to P Chidambaram in INX Media case : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிஐ பின்னர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைத்தது.

    P Chidambaram seeks bail in INX Media money laundering case

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

    எனினும் ப சிதம்பரம் முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    அமலாக்கத்துறை ப சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகிறது., நாளையுடன் ப சிதம்பரம் காவல் முடிய உள்ள நிலையில், நாளை மீண்டும் ப சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.

    English summary
    A day after being granted bail by the Supreme Court against the CBI, P Chidambaram moves Delhi HC seeking bail against ED case in the INX Media probe
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X