டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

BREAKING NEWS LIVE: அமலாக்கத்துறை வழக்கு.. ப. சிதம்பரத்திற்கு செப். 5 வரை முன்ஜாமீன்

Google Oneindia Tamil News

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் மீது தற்போது விசாரணை நடந்து வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு இன்றோடு 9 நாட்கள் முடிய போகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் முன் ஜாமீன் கேட்டும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டும் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ப. சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வாதம் தற்போது நடந்து வருகிறது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, போபன்னா ஆகியோர் வழக்கை விசாரித்து வருகிறார்கள் .

Newest First Oldest First
4:30 PM, 29 Aug

அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு செப்டம்பர் 5 வரை முன்ஜாமீன். அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 5ல் உத்தரவு வழங்கப்படும். அதுவரை ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை.
3:29 PM, 29 Aug

ப. சிதம்பரத்தை அவர்கள் முறையாக கைது செய்தால் தவறு இல்லை. ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. வெறும் கேஸ் டைரியை வைத்து ப. சிதம்பரம் மீது குற்றம் சுமத்துகிறார்கள் - கபில் சிபல்.
3:28 PM, 29 Aug

எப்போதும் வழக்கு விசாரணையின் போதே கேஸ் டைரியை நீதிமன்றத்தில் அளிப்பார்கள் - கபில் சிபல் வாதம்
3:28 PM, 29 Aug

விசாரணை முடிந்த பின்பே கேஸ் டைரியை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது. அந்த டைரியை வைத்தே ப. சிதம்பரத்திற்கு காவலும் வழங்கி உள்ளனர். எந்த வழக்கிலும் இப்படி நடந்தது இல்லை - கபில் சிபல் வாதம்.
3:28 PM, 29 Aug

ப. சிதம்பரம் வழக்கை டெல்லி ஹைகோர்ட் வித்தியாசமாக அணுகி உள்ளது - கபில் சிபல் வாதம்
3:20 PM, 29 Aug

சிபிஐ அமைப்பிற்கு ப. சிதம்பரத்தை கைது செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் சிபிஐ எதன் அடிப்படையில் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளனர் - கபில் சிபல்.
3:20 PM, 29 Aug

ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை தொடங்கினார்
12:56 PM, 29 Aug

கத்தியால் ஒருவரை குத்துவது எப்படி குற்றமோ அப்படிதான் இதுவும். அது தனி மனித தாக்குதல்: இது தேசத்தின் மீதான தாக்குதல் - சிபிஐ வாதம்.
12:56 PM, 29 Aug

ப. சிதம்பரத்தை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். வழக்கிற்கு அவசியம் என்பதால் காவலை தொடர வேண்டும் - சிபிஐ.
12:35 PM, 29 Aug

ப. சிதம்பரம் வெளியே இருந்தால் விசாரணைக்கு பெரிய பிரச்சனை ஏற்படும் - சிபிஐ
12:35 PM, 29 Aug

ப. சிதம்பரத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு பாதுகாப்பு கூட விசாரணையை கெடுக்கும் - சிபிஐ
12:31 PM, 29 Aug

ஆதாரங்களை அழிப்பதற்கு ப. சிதம்பரம் முயல்வார். சாட்சியங்களை மிரட்டுவதற்கு ப. சிதம்பரம் முயல்வார் - சிபிஐ.
12:31 PM, 29 Aug

ப. சிதம்பரத்திடம் நாங்கள் பேட்டி எடுக்க விரும்பவில்லை: விசாரணை செய்ய விரும்புகிறோம். ஆனால் ப. சிதம்பரம் எங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதே இல்லை - சிபிஐ.
12:29 PM, 29 Aug

ப. சிதம்பரத்திடம் இருந்து உண்மையை வர வைக்க ஒரே வழிதான் இருக்கிறது. அவரை கைது செய்தால் மட்டுமே எங்களால் அவரிடம் உண்மையை வரவைக்க முடியும். அவருக்கு ஜாமீன் கொடுத்தால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது - சிபிஐ.
12:28 PM, 29 Aug

விஜய் மல்லையா போன்றவர்களுக்கு ப. சிதம்பரம் வழக்கு உதாரணமாக மாற கூடாது - சிபிஐ
12:28 PM, 29 Aug

ஜாகிர் நாயக், நீரவ் மோடி ப. சிதம்பரம் வழக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடாது - சிபிஐ
12:28 PM, 29 Aug

ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் வழங்க கூடாது - சிபிஐ தரப்பு
12:28 PM, 29 Aug

ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாக மாறும் - சிபிஐ தரப்பு
12:28 PM, 29 Aug

ஐஎன்எக்ஸ் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

 P Chidambaram: Supreme Court starts hearing INX Media Case
English summary
P Chidambaram Case: Supreme Court may give important order today in INX Media case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X