டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ!

Google Oneindia Tamil News

Recommended Video

    சுவர் ஏறி குதித்து வீடு புகுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் உச்சகட்ட பாதுகாப்புடன் கைது செய்து அழைத்து சென்று இருக்கிறார்கள்.

    பல்வேறு திருப்பங்களுக்கு பின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் எகிறி குதித்து அவரை கைது செய்தனர்.

    P Chidambaram taken to CBI headquarters with heavy protection

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்னும் முன் ஜாமீன் பெறவில்லை. இவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. தற்போது அதற்கு முன்பாக அவர் அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்று மாலை ப. சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சென்றனர். சிபிஐ அதிகாரிகள் வேகமாக அவரின் வீட்டிற்குள் சுவர் வழியாக எகிறி குதித்தனர். வரிசையாக 20 அதிகாரிகள் வேகமாக அவரின் வீட்டிற்கு உள்ளே எகிறி குதித்தனர்.

    ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்?ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்?

    உள்ளே சென்ற அதிகாரிகள் கடும் வாக்குவாதம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு பின் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். இரண்டு பக்கமும் அதிகாரிகள் சூழ அவர் காரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார். ப. சிதம்பரம் வெள்ளை நிற காரில் பின் இருக்கையில் நடுவில் அமரவைக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

    அவருக்கு இரண்டு பக்கமும் நெருக்கமாக அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர். சிபிஐ அதிகாரிகள் வந்த வாகனம் முன்பும், பின்பும் சென்றது. முழு பாதுகாப்போடு அவர் தற்போது விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    English summary
    Former Minister P Chidambaram taken to CBI headquarters with heavy protection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X