டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப. சிதம்பரம் பங்கேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. இன்று பிற்பகல் விடுதலை!

    டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 106 நாட்கள் டெல்லி திகார் சிறைவாசம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21-ந் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப. சிதம்பரத்துக்கு, சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    P Chidambaram to attend Parliament today

    ஆனால் அதற்கு முன்னரே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் பெரும் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது.

    இதனையடுத்து நேற்று இரவு டெல்லி திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறை வளாகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிதம்பரத்துக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். பின்னர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சிதம்பரம் சந்தித்து பேசினார்.

    மகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்மகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்

    இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப. சிதம்பரம் பங்கேற்க உள்ளார். பொருளாதார நிலையில் பெரும் சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் அனல்பறந்து கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    English summary
    Former Union Minister P Chidambaram will attend Parliament today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X