டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமக்கும் ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்பதை அன்றே அறிந்த திருவள்ளுவர்.. ப சிதம்பரம் ட்வீட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமக்கும் ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்பதை அன்றே அறிந்த திருவள்ளுவர்.. ப சிதம்பரம் ட்வீட்!

    டெல்லி: தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

    தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். அவர் அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.

    இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. திருவள்ளுவருக்கு காவி உடையும் நெற்றியில் விபூதியும் அணிவித்தது போன்ற புகைப்படத்தை தமிழக பாஜக வெளியிட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

    திருவள்ளுவர் சிலையை அவமதித்த பாவிகளுக்கு மன்னிப்பே இல்லை- வைகோ திருவள்ளுவர் சிலையை அவமதித்த பாவிகளுக்கு மன்னிப்பே இல்லை- வைகோ

    மதசாயம்

    மதசாயம்

    திருவள்ளுவரை தமிழக பாஜக அவமதிப்பு செய்துவிட்டது. அவருக்கும் மதச்சாயம் பூசி விட்டது என பலர் கொந்தளித்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமானப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவரை அவமானப்படுத்தியதாக திமுக இலக்கிய அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கருத்து

    கருத்து

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப சிதம்பரம் தன் சார்பாக ட்விட்டரில் கருத்துகளை பதிவிடுமாறு கூறியிருந்தார். அதன்படி அவர்களும் அவ்வப்போது இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களுக்கு கருத்து வெளியிட்டு வந்தனர்.

    ப சிதம்பரம் ட்வீட்

    இந்த நிலையில் திருவள்ளுவர் விவகாரத்திலும் ப சிதம்பரம் குடும்பத்தினர் ட்வீட் வெளியிட்டுள்ளனர். அதில் கூறுகையில் தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.

    குறளின் விளக்கம்

    "நாணாமை நாடாமை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்".
    - குறள் 833

    பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள் என விளக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Senior Congress leader P Chidambaram tweets 833rd kural by condemning Tamilnadu BJP portrays Thiruvallur with Saffron dress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X