டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதார மந்த நிலை... நாடாளுமன்றத்தில் மத்திய அரசை அம்பலப்படுத்த காங்.-க்கு சிதம்பரம் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை காங்கிரஸ் அம்பலப்படுத்த வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் ப. சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை வழக்கு தொடர்ந்துள்ளன. சிபிஐ வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ப. சிதம்பரம்.

P Chidambaram urges to Cong. to expose Centres mismanagement of economy.

உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அளித்த தீர்ப்பானது, முந்தைய தீர்ப்புகளின் கட் அண்ட் பேஸ்ட் என்ற விவகாரமும் முன்வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இதனையொட்டி ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் இன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை அம்பலப்படுத்த காங்கிரஸ் கட்சி, எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

English summary
Former Union Minsiter P Chidambaram tweets, When Parliament opens today, @INCIndia must lead the Opposition to expose the utter mismanagement of the economy. Which aspect of the economy is doing well? Not one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X