டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது.. ராகுலின் ''மினிமம் சேலரி'' திட்டத்தை பாராட்டும் ப.சிதம்பரம்!

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குறுதிக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல நாளாக பிளான் போட்ட பாஜக.. அதிரடியாக அறிவித்த காங்கிரஸ்

    டெல்லி: அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குறுதிக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இதை காங்கிரஸ் வாக்குறுதியாக வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து நிறைய விவாதங்கள் தொடங்கி உள்ளது.

    மாற்றம்

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்துள்ள டிவிட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. இது ஏழைகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    பின்பு கூறுவோம்

    அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் Universal Basic Income ( UBI) கடந்த இரண்டு வருடமாக பெரிய அளவில் விவாதம் செய்யப்பட்டது. இதை தற்போது நடைமுறைப்படுத்துவது தேவையாகிவிட்டது. இதை ஏழைகளுக்காக நடைமுறைப்படுத்த வேண்டும். எங்கள் திட்டத்தை நாங்கள் வாக்குறுதியின் போது கூறுவோம்.

    கண்டிப்பாக

    2004 முதல் 2014 வரை 14 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். நாம் எல்லோரும் தற்போது வறுமையை ஒழிக்க மேலும் ஒரு உறுதியான முயற்சியை எடுக்க இருக்கிறோம்.

    ஏழ்மை

    இந்தியாவில் இருக்கும் ஏழைகள்தான் இதன் வளங்களை அனுபவிக்க வேண்டும். ராகுல் காந்தியின் கோரிக்கையை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ப.சிதம்பரம் கூறியுளளார்.

    English summary
    P.Chidambaram welcomes Rahul's Minimum Income Guarantee promise, says The poor of India have the first charge on the resources of the country. Congress will find the resources to implement the promise of Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X