டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

BREAKING NEWS LIVE: ப. சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு இன்றோடு காவல் முடிகிறது. அவர் சற்று நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ஐஎன்எக்ஸ் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப. சிதம்பரத்தை மொத்தம் 10 நாட்கள் காவலில் எடுக்க உத்தரவு பிறப்பித்தது. ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட காவல் இன்றோடு முடிகிறது.

இதையடுத்து ப. சிதம்பரம் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் செய்கிறார்கள். ஐஎன்எக்ஸ் வழக்கில் மற்றும் சிபிஐ சார்பாக சொலீஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆகிறார்கள்.

Newest First Oldest First
3:48 PM, 30 Aug

ப. சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை வரை சிபிஐ காவல் நீட்டிப்பு
3:48 PM, 30 Aug

என்னிடம் 55 மணி நேரம் கேள்வி கேட்டனர். 400 கேள்விகள் கேட்டனர், எல்லாம் ஒரே மாதிரியான கேள்விகள்- ப. சிதம்பரம்.
3:47 PM, 30 Aug

திங்கள் வரை ப. சிதம்பரம் காவலில் இருப்பதில் பிரச்சனை இல்லை. சிபிஐ காவலுக்கு எதிராக விசாரணை திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. அதுவரை ப. சிதம்பரம் காவலில் இருப்பதில் பிரச்சனை இல்லை - ப. சிதம்பரம் தரப்பு.
3:45 PM, 30 Aug

காவல் நீட்டிப்பிற்கு வலுவான காரணம் இல்லை - நீதிபதி
3:43 PM, 30 Aug

இப்படியே போனால் நீங்கள் ஒரு மாதம் கூட காவல் கேட்பீர்கள் - நீதிபதி
3:43 PM, 30 Aug

வழக்கில் சில விஷயங்கள் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. அதனால் ப. சிதம்பரத்தை கூடுதலாக விசாரிக்க வேண்டும் - நடராஜ்.
3:43 PM, 30 Aug

நீங்கள் ஏன் தொடக்கத்திலேயே 15 நாட்கள் கேட்டிருக்க கூடாது - நீதிபதி கேள்வி
3:43 PM, 30 Aug

சிதம்பரத்தை கூடுதலாக 5 நாட்கள் விசாரிக்க வேண்டும் - நடராஜ் வாதம்
3:42 PM, 30 Aug

ப. சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் வாதம்
3:41 PM, 30 Aug

சிபிஐ சார்பாக துணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜ் வாதம்
3:32 PM, 30 Aug

ப.சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் எடுக்க வேண்டும் - சிபிஐ கோரிக்கை
3:17 PM, 30 Aug

ப.சிதம்பரம் சற்று நேரத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ப.சிதம்பரம் தற்போது சிபிஐ அலுவலகத்தில் இருந்து அழைத்து செல்லப்படுகிறார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை.
11:36 AM, 30 Aug

ப. சிதம்பரம் சிபிஐ வழக்கு: டெல்லி சிபிஐ கோர்ட்டில் சற்று நேரத்தில் விசாரணை. சற்று நேரத்தில் ப. சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றோடு முடிகிறது.

P Chidambaram will appear before CBI court today - LIVE UPDATES
English summary
P Chidambaram will appear before CBI court today as his CBI custody ends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X