டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் அமர் சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் உட்பட 118 பேருக்கு மத்திய அரசு பத்மஶ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு பத்மஶ்ரீ விருதுகள் 118 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 3 பேருக்கு பத்ம ஶ்ரீ

21 people Padma Shri Awards 2020

இந்த ஆண்டு பத்ம ஶ்ரீ விருதுக்கு தமிழகத்தின் அமர்சேவா சங்க நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணன், கர்நாடகாவின் துளசி கவுடா, கேரளா பொம்மலாட்ட கலைஞர் பங்கஜாக்சி, கர்நாடகா பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா, பஞ்சாப் சமூக சேவகர் முகமது ஷரீஃப், கால்நடை மருத்துவர் குஷால் கன்வார், மேற்கு வங்க மருத்துவர் அருணோடே மண்டல், மகாராஷ்டிராவின் பப்பட்ராவ் பவார், பாம்பே சிஸ்டர்ஸான லலிதா- சரோஜா உள்ளிட்ட 118 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் மனோகர் தேவதாஸ், புதுவையின் முனுசாமி கிருஷ்ண பக்தர் ஆகியோருக்கும் பத்ம ஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்

Padma Awards 2020: Padma Vibhushan for George Fernandes, Arun Jaitle, Sushma Swaraj

இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதுகள் 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மொரீஷியஸின் அனீருத் ஜூக்நாத் ஜிசிஎஸ்கே, விளையாட்டு வீராங்கனை மேரி கோம், சன்னுலால் மிஸ்ரா, மறைந்த உடுப்பி மடாதிபதி விஸ்வதீர்த்த ஸ்வாமிஜி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

16 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்

பத்ம பூஷண் விருதுகள் மொத்தம் 16 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சமூக செயற்பாட்டாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், தொழிலதிபர் வேணு ஶ்ரீனிவாசன் உட்பட 16 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

English summary
21 people have been conferred with Padma Shri Awards 2020 including Jagdish Jal Ahuja, Mohammed Sharif, Tulasi Gowda and Munna Master
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X