டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி தாய் ஹீராபென்னுடன் இருக்கும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசி பெறும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஏலத்தில் விற்பனை செய்து கிடைக்கும் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடவே பிரதமர் மோடி முன்வந்தார்.

Painting of Modi with his mother sold for Rs. 20 lakhs

இதையடுத்து அந்த பரிசு பொருட்கள் இடம்பெற்ற கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை மத்திய கலாச்சார அமைச்சகம் டெல்லியில் நடத்தியது. இதில் மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்... மத்திய அரசு அனுமதிமாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்... மத்திய அரசு அனுமதி

அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை இந்த ஏல நிகழ்ச்சி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இதில் அனைத்து பொருட்களும் ஏலத்துக்கு போனது. இந்த ஏலம் நேற்று முன் தினத்துடன் முடிந்தது. இதில் குறைந்தது ரூ 300 முதல் ரூ 2.5 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதில் அதிகப்பட்சமாக தேசியக் கொடியின் பின்னணியில் மகாத்மா காந்தியுடன் பிரதமர் இருப்பது போன்ற படம் ரூ 25 லட்சத்துக்கு ஏலம் போனது.

பிரதமர் மோடி தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசிபெறும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு விற்பனையானது. மேலும் மணிப்புரி நாட்டுப்புறக்கலையை பிரதிபலிக்கும் படம் ரூ 10 லட்சத்துக்கும் பசு கன்று சிற்பம் ரூ 10 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

English summary
Painting of Modi with his mother sold for Rs. 20 lakhs and also photo of PM and Gandhi sold for Rs 25 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X