டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்ப்பையும் மீறி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா, பாக். பொருளாதார மண்டலங்கள்.. சேட்டிலைட் படங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான் கான் எச்சரித்த அடுத்த நாளே பாகிஸ்தான் அட்டகாசம்

    டெல்லி: சீனா- பாகிஸ்தான் இடையே பொருளாதார பெருவழித்தட மேம்பாட்டு திட்டங்களை அமைக்க இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரு நாடுகளும் இணைந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி வருகின்றன.

    சியாசின் கிளேசியர் பகுதியில் 1963-ஆம் ஆண்டு ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா பயணம் செய்ய பாகிஸ்தான் நீண்டகாலமாக உதவி வந்தது. அங்கு 2017-ஆம் ஆண்டு சீனா சாலையையும் ராணுவ தளங்களையும் அமைத்தது.

    இந்த நிலையில் சீனா- பாகிஸ்தான் இடையே பொருளாதார பெருவழித்தட மேம்பாட்டு திட்டங்களை அமைக்க இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரு நாடுகளும் இணைந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி வருகிறது.

    சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

    இதற்கான செயற்கைகோள் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. வாகன போக்குவரத்து, விமான ஓடுதளம் ஆகியவை அமைக்கப்படுவது படங்களில் தெளிவாக தெரிகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தான் முதலீட்டுக் குழுமம் கில்ஜித் நகரத்தில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் 9 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க அனுமதி அளித்தது.

    ஆக்கிரமிப்பு காஷ்மீர்

    ஆக்கிரமிப்பு காஷ்மீர்

    இதற்கான ஒப்பந்தம் சீனா- பாகிஸ்தான் இடையே கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனா சென்ற போது கையெழுத்தாகியதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருநாடுகளும் கட்டுமான பணிகளை தொடங்கியது.

    750 ஏக்கர்

    750 ஏக்கர்

    பாகிஸ்தான் அரசு இணையதளத்தில் இந்த கட்டுமான பணி பகுதி 250 ஏக்கர் என கூறப்பட்ட நிலையில் செயற்கைகோள் படங்களோ 750 ஏக்கரை சீனா பயன்படுத்துவதை காட்டுகின்றன. கட்டுமான பொருள்கள் வைக்கும் கிடங்கு, சிமென்ட் கான்கிரீட் உருவாக்கும் இடம், கலவை கலக்கும் இடம், கிரஸ்ஷர் இடங்கள் என அந்த பகுதியில் சீனா அமைக்கிறது.

    சிறிய மசூதி

    சிறிய மசூதி

    கட்டுமானங்கள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டு ராணுவ அதிகாரிகள் தங்குவதற்காக தனி வீடு அமைக்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்காக அங்கு ஒரு சிறிய மசூதியும் கட்டப்பட்டு வருகிறது.

    English summary
    Here are the satellite pictures of Pakistan and China are building Special Economic Zones in Pakistan occupied Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X