டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு.. பிளாக் லிஸ்டை நோக்கி செல்கிறதா?

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்..பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு குட்டு-வீடியோ

    டெல்லி: தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) கூறியுள்ளது.

    சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்.

    இதன் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகளை இது தரம் பிரிக்கும். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை எஃப்ஏடிஎஃப் பிளாக் லிஸ்ட் செய்வது வழக்கம்.

    பாகிஸ்தான் எப்படி

    பாகிஸ்தான் எப்படி

    இந்த நிலையில் தீவிரவாத அமைப்புகள் எளிதாக பொருளாதார உதவிகளை பெறுவதாக கூறி கடந்த வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் கிரே லிஸ்ட் செய்தது. நீங்கள் தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்டோபர் 2019க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஃப்ஏடிஎஃப் கூறியது.

    எத்தனை

    எத்தனை

    இதற்காக பாகிஸ்தானிடம் அல் கொய்தா, ஜமாத் உத்- தவா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 40 தீவிரவாத இயக்கங்களின் பட்டியலை எஃப்ஏடிஎஃப் கொடுத்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கிரே லிஸ்டில் இருந்து நீக்குவதாக எஃப்ஏடிஎஃப் கூறியது. ஆனால் பாகிஸ்தான் இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போதுமான அளவு நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்காமல் மெத்தனமாக இருந்துள்ளது என்று எஃப்ஏடிஎஃப் தெரிவித்துள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    40 அமைப்புகளில் 1 அமைப்பு மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது, அல்கொய்தா உள்ளிட்ட நான்கு அமைப்புகள் மீது நடவடிக்கையே இல்லை. 26 அமைப்புகள் மீது மெல்லிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எஃப்ஏடிஎஃப் தெரிவித்துள்ளது.

    திருப்தி

    திருப்தி

    இதனால் பாகிஸ்தான் நடவடிக்கை மீது திருப்தி இல்லை. தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்தவில்லை. மும்பை தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதல்களை செய்த அமைப்புகளை பாகிஸ்தான் ஒடுக்கவில்லை என்று எஃப்ஏடிஎஃப் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    இந்த நிலையில் எஃப்ஏடிஎஃப் நடத்தும் வருடாந்தர சந்திப்பு இந்த மாதம் 13-18 தேதிகளில் பாரிஸில் நடக்க உள்ளது. இதில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும். பாகிஸ்தானை கிரே லிஸ்டில் வைத்து இருப்பதாக அல்லது பிளாக் லிஸ்டிற்கு கொண்டு செல்வதா என்று இதில் முடிவெடுக்கப்படும்.

    English summary
    Pakistan has done nothing against Terrorism says Terror Watchdog FATF in their report before Paris meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X