டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானிலும் மூக்கை நுழைத்த சீனா...கம்பளம் விரித்த பாகிஸ்தான்...இந்தியாவுக்கு நெருக்கடி!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா, சீனா இடையே ஏற்கனவே பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் மூக்கை நுழைக்க பீஜிங் முயற்சித்து வருவது டெல்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமில்லை அமெரிக்காவுக்கும் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.

Recommended Video

    Afghanistan விவகாரத்தில் தலையிடும் China! Indiaவுக்கு நெருக்கடி

    ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவுமாறு, ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான சிறப்பு சீன தூதர் லியு ஜியானை இஸ்லாமபாத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேசி அழைத்து இருந்தார்.

    கழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்புகழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்பு

    மும்முனை சந்திப்பு

    மும்முனை சந்திப்பு

    தலிபான் தீவிரவாதி முல்லா அப்துல் கானி பரதர் தலைமையிலான குழுவை குரேசி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசி இருந்தார். இந்த தீவிரவாதி முல்லாவைத்தான் பாகிஸ்தான் சிறையில் எட்டு ஆண்டுகள் அந்த நாடு அடைத்து வைத்து இருந்தது. கடந்த 2018ல் அவரை விடுவித்தது. இந்த முல்லாதான் குரேசி மற்றும் சீன தூதரை சந்தித்துப் பேசியுள்ளார்.

    போர் நிறுத்த ஒப்பந்தம்

    போர் நிறுத்த ஒப்பந்தம்

    ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் எப்போதும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும்தான் மிரட்டலாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே அந்த நாட்டில் தங்களது பாதுகாப்புப் படைகளை நிறுத்தி சிறிது சிறிதாக அமெரிக்கா வாபஸ் பெற்றது. இன்னும் முழுமையாக அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் சீனா இங்கும் மூக்கை நுழைத்துள்ளது. சீனாவுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று இருப்பது பாகிஸ்தான்.

    தெற்காசிய நாடுகள்

    தெற்காசிய நாடுகள்

    கொரோனா தாக்கத்திற்குப் பின்னர் தலிபான் முக்கியத் தலைவரை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் சீனாவும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் நுழைந்துள்ளது. இதுவரை ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஒதுங்கி இருந்த சீனா ஏன் தற்போது அக்கறை செலுத்துகிறது என்ற கேள்வியும் எழுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது அதிகாரத்தை வலுப்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருவது அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விமான நிலையம்

    விமான நிலையம்

    ஆப்கானிஸ்தானில் இப்படி என்றால், வங்கதேசத்திலும் சீனா சும்மா இருக்கவில்லை. அங்கும் பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்தியாவுக்கு அருகில் வங்கதேசத்தில் கட்டப்பட்டு வரும் சைலட் என்ற இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைத்து வருகிறது. இதுமட்டுமின்றி பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் வங்கதேசத்துடன் மேகொண்டுள்ளது. நவீன நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தில் இருந்து வரும் பொருட்களுக்கு சீனா 97 சதவீத வரிவிலக்கு அளித்துள்ளது. அந்த நாட்டுடன் தற்போது பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருப்பதுடன் அந்த நாட்டில் பெரிய அளவில் முதலீட்டையும் செய்து வருகிறது.

    நிலம் ஆக்கிரமிப்பு

    நிலம் ஆக்கிரமிப்பு

    வங்கதேசத்தில் இப்படி என்றால் நேபாளத்தில் பெரிய அளவில் அந்த நாட்டின் ஏழு மாவட்டங்களின் எல்லைகளை தன்னுடன் சீனா இணைத்துக் கொண்டுள்ளது. டோலகா, கோர்கா, தர்சுலா, ஹம்லா, சிந்துபால்சவுக், சந்குவசபா மற்றும் ரசுவா ஆகிய ஏழு மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை தன்னுடன் இணைத்து, அந்த நாட்டை தெற்கு நோக்கி நகர்த்தி இருக்கிறது.

    எவரெஸ்ட் ஆய்வு

    எவரெஸ்ட் ஆய்வு

    இத்துடன் நின்றுவிடவில்லை சீனா. நேபாளத்துடன் 2019ஆம் ஆண்டில் எவரெஸ்ட் மலை தொடர்பாக ஏற்படுத்திக் கொண்ட வரைவு ஒப்பந்தத்தின்படி, எவரெஸ்ட் மலையில் ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தி வருகிறது. இது இந்தியாவையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீனாவுக்கு வரவேற்பு

    சீனாவுக்கு வரவேற்பு

    இந்த சூழலில்தான் கடந்த வாரம் வங்கதேசத்துடன் நட்பை, உறவை பலப்படுத்தும் வகையில் சிறப்பு விமானத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஸ்ரிங்லாவை பிரதமர் மோடி அனுப்பி வைத்து இருந்தார். ஆனால், இவரை வரவேற்க வங்கதேசத்தின் சாபில் யாரும் வரவில்லை. ஆனால், வங்கதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சென்ற 10 தலைமையிலான குழுவை வங்கதேச அரசின் சார்பில் பிரதிநிதிகள் வரவேற்று இருந்தனர். இதுவும் இந்தியா, வங்கதேசத்தின் இடையிலான உறவுக்கு சான்றாக அமைந்து இருக்கிறது.

    English summary
    Pakistan has invited China to end the war in Afghanistan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X