டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தை ஒடுக்குங்க.. இல்லைனா தாக்குதல்தான்.. பாக்.கிற்கு முதல் நாளே வார்னிங் தந்த புது தளபதி

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகலாம் என்று இந்திய ராணுவத்தின் புதிய தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகலாம் என்று இந்திய ராணுவத்தின் புதிய தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ராணுவ படையின் (தரைப்படை) தளபதி பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். இவர் இனி மூன்று படைகளுக்கும் தளபதியாக செயல்படுவார்.

இந்தியாவில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய தரைப்படை ராணுவத்தின் புதிய தளபதியாக் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உலகம் புதிய ஆயுதத்தை பார்க்க போகிறது.. புத்தாண்டு நாளில் ஷாக் கொடுத்த வடகொரியா அதிபர் இந்த உலகம் புதிய ஆயுதத்தை பார்க்க போகிறது.. புத்தாண்டு நாளில் ஷாக் கொடுத்த வடகொரியா அதிபர்

என்ன பேட்டி

என்ன பேட்டி

இதையடுத்து புதிய ராணுவ தளபதி முகுந்த் நரவனே தன்னுடைய பொறுப்புகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், முப்படைகளுக்கு தலைமை தளபதியை நியமித்தது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறனை மேம்படுத்தும். இது சரியான நடவடிக்கைதான். இந்திய ராணுவத்தின் சிறப்பான செயல்பாட்டை நான் தொடர்ந்து செயல்படுத்துவேன்.

நல்லது

நல்லது

எல்லை ஊடுருவலை கண்டிப்பாக கட்டுப்படுத்துவேன். எல்லை பாதுகாப்பை கண்டிப்பாக உறுதிப்படுத்துவேன். அண்டை நாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை எனில் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்திய ராணுவம் இனி முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அதற்கு காரணமாக இருக்கும் இடங்களில் முன் கூட்டியே தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. முன்கூட்டியே சில இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பயங்கரவாதம்

பயங்கரவாதம்

சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு போதுமான அளவில் படை வீரர்கள் குவிக்கப்படுவார்கள். அங்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் சமாளிக்க படைகள் தயார் நிலையில் இருக்கும் என்றும் ஜெனரல் நரவானே தெரிவித்துள்ளார்.

English summary
Pakistan has to work against Terrorism or will face action says Indian Army's New chief MM Naravane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X