டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழப்பான அரசியல்வாதி ராகுல்.. தாத்தா நேரு போல் இருங்கள்.. ராகுலுக்கு பாகிஸ்தான் அமைச்சர் அறிவுரை

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் ராகுல்காந்தியின் அரசியல் குழப்பமானது என பாகிஸ்தான் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.

காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதனால் காஷ்மீரில் தங்கள் ஆக்கிரமிரப்பு குறித்து பதறிய பாகிஸ்தான் உலகநாடுகள் வரை ஆதரவு திரட்ட முயன்று தோல்வி அடைந்தது.

காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் வார்த்தைகளை பாகிஸ்தான் தனது இந்தியா எதிர்ப்பு விவகாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது.

டிவியில்

டிவியில்

பாலகோட் தாக்குதலின்போது புல்வாமா பதற்றத்தில் கூட ராகுல்காந்தியின் பேச்சுகள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் ரேடியோ மற்றும் டிவிக்களில் இந்தியா எதிர்ப்புக்கு பாகிஸ்தான் பயன்படுத்தியது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி ஐநாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் ராகுல் காந்தியின் கருத்துகளை சுட்டிக் காட்டி கடிதம் எழுதியுள்ளார்.

டுவிட்டர்

இந்த நிலையில் திடீரென ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பல விவகாரங்களில் இந்த அரசாங்கத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இதை நான் முற்றிலும் தெளிவுப்படுத்துகிறேன். காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையாகும். இதில் தலையிட பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ தலையிட உரிமையில்லை.

குழப்பமான அரசியல்

குழப்பமான அரசியல்

ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடைபெறுகிறது. இந்த வன்முறை பயங்கரவாதிகளின் ஆதரவு நாடான பாகிஸ்தானால் தூண்டப்படுகிறது என கூறியிருந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் உசேன் சவுத்ரி ராகுல்காந்தி குழப்பமான அரசியலை நடத்துகிறார் என கூறிவுள்ளார்.

அடையாளம்

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். உங்கள் அரசியலில் மிகப் பெரிய பிரச்சினை குழப்பம் உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் தனது பெரிய தாத்தா ஜவஹர்லால் நேருவை போல் தெளிவாகவும் உதாரணமாகவும் இருக்க வேண்டும். நேரு இந்தியாவின் மதசார்பின்மைக்கு அடையாளமாக இருந்ததாக பவாத் உசேன் கூறி இருந்தார்.

English summary
Pakistan Minister advises Rahul Gandhi to stand like ur great grandfather Nehru who is a symbol of Indian Secularism and liberal thinking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X