டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 இந்தியர்களுக்கு...பயங்கரவாதிகள் முத்திரை...ஐநாவில் மூக்குடைபட்ட பாகிஸ்தான்!!.

Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில், 1267 பொருளாதாரத் தடைக் குழுவின் கீழ், இரண்டு இந்திய பிரஜ்ஜைகளை உலக பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு முயற்சித்த பாகிஸ்தானின் நடவடிக்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் முறியடித்தன.

இவர்களை பயங்கரவாதிக்ள என்று நிரூபிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்த ஐந்து நாடுகளும் கெடு விதித்து இருந்தன. இந்த நிலையில் பாகிஸ்தானால் நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த ஐந்து நாடுகளும் நேற்று கூடிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தன.

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி போராடிய வியாபாரிகள் 32 பேர் கைது.. திடீரென சாலை மறியல்திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி போராடிய வியாபாரிகள் 32 பேர் கைது.. திடீரென சாலை மறியல்

நிரந்தர உறுப்பினர்கள்

நிரந்தர உறுப்பினர்கள்

இந்த ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். ஜெர்மன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர் நாடுகளாக இல்லை.

பலுசிஸ்தான் தாக்குதல்

பலுசிஸ்தான் தாக்குதல்

இந்தியர்களான கோபிந்த பட்நாயக் துக்கிவல்சா மற்றும் அப்பாஜி அங்காரா ஆகிய இருவரையும் சர்வதேச பயங்கரவாதிகளாக சித்திரிக்க பாகிஸ்தான் முயற்சித்தது. இவைகளில் கோபிந்த பட்நாயக் துக்கிவல்சா ஆப்கானிஸ்தான் நாட்டில் திறன் கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தவர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மஸ்துங் என்ற இடத்தில் 2018, ஜூலை 13ஆம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் சிராஸ் ரைசானி உள்பட 160 பேர் கொல்லப்பட்டு இருந்தனர். இந்த குற்றச்சாட்டில் கோபிந்த பட்நாயக் துக்கிவல்சாவை பாகிஸ்தான் சேர்த்து இருந்தது.

மதச்சாயம்

மதச்சாயம்

இதுகுறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டிஎஸ் திருமூர்த்தி தனது ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார். அந்தப் பதிவில், ''1267 பொருளாதாரத் தடைக் குழுவின் கீழ் இந்தியர்கள் இருவருக்கு மதச் சாயம் பூசி பயங்கரவாதிகள் என்ற அடையாளத்தை கொடுக்க பாகிஸ்தான் முயற்சித்தது. அந்த முயற்சி ஐநா பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது'' என்று பதிவிட்டுள்ளார்.

ஜெய்ஷ் இ முகம்மது

ஜெய்ஷ் இ முகம்மது

கடந்தாண்டு மே மாதம் இதே ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டார். இதற்கு இந்தியா முழு முயற்சி எடுத்து இருந்தது. இதையடுத்தே இந்தியர்கள் இருவர் மீது பயங்கரவாதிகள் என்ற அடையாளத்தை திணிக்க பாகிஸ்தான் முயற்சித்தது. அதுவும் தோல்வியடைந்ததது. பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு சீனாவும் ஆதரவு அளித்து இருந்தது.

இந்தியா திரும்பினர்

இந்தியா திரும்பினர்

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த நான்கு இந்தியர்கள் மீது பயங்கரவாதிகள் பட்டத்தை சூட்ட பாகிஸ்தான் முயற்சித்தது. இவர்கள் நான்கு பேரும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிவிட்டனர்.

பெஷாவர் தாக்குதல்

பெஷாவர் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஒரு வங்கியில் அங்காரா பணியாற்றி வந்தார். 2017, பிப்ரவரி 13ஆம் தேதி லாகூரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயரையும் பாகிஸ்தான் சேர்த்து இருந்தது. இதற்கு முன்பு 2014ல் பெஷாவரில் நடந்த தாக்குதலிலும் இவரது பெயரை பாகிஸ்தான் சேர்த்து இருந்தது.

English summary
Pakistan move to list two Indians as global terrorists blocked bu 5 UN members
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X