டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, அப்படியே பேசினாலும் கூட அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியது மட்டுமாகவே இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரம் முன்பு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

இதனால் காஷ்மீரில் கடந்த வாரம் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இப்போதும் காஷ்மீர் எல்லையில் அதிக அளவில் ராணுவம் நிறுத்தப்பட்டு வருகிறது.

திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் திருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்

இப்போதும் இருக்கிறது

இப்போதும் இருக்கிறது

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சீனா இரண்டு நாடுகளும் சேர்த்து உலக அளவிற்கு கொண்டு சென்றது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆலோசனையின் முடிவில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி அளித்தார். அதில், இனிமேல் காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை. பாகிஸ்தானுடன் நாங்கள் இனி நடத்த போகும் பேச்சுவார்த்தை எல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீர் குறித்தது மட்டும்தான். அதைப்பற்றி மட்டும்தான் இனி நாங்கள் பாகிஸ்தானிடம் பேச போகிறோம்.

ராஜ்நாத் சிங் கருத்து

ராஜ்நாத் சிங் கருத்து

நாங்கள் பாலக்கோட்டில் நடத்திய தாக்குதலை விட பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே இப்படி பேட்டி அளித்து இருக்கிறார். அப்படி என்றால் அவர்களே பாலக்கோடு தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல் என்பதை ஒப்புக்கொண்டார்கள் என்று அர்த்தம்.

என்ன வளர்ச்சி

என்ன வளர்ச்சி

காஷ்மீரின் வளர்ச்சிக்காக அதன் சிறப்பு அதிகாரத்தை நீக்கி இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் இதை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இனியும் நாங்கள் காஷ்மீர் விஷயம் குறித்து பாகிஸ்தானுடம் பேச போவதில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் காஷ்மீர் பகுதி பற்றிய வேண்டுமானால் ஆலோசிப்போம்.

எப்போதும் காஷ்மீர்

எப்போதும் காஷ்மீர்

காஷ்மீருக்கு எதிராக எப்போதும் தவறான முடிவுகளை எடுப்பதே பாகிஸ்தானின் வேலையாக இருக்கிறது. முதலில் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை மீறியது. அதன்பின் தீவிரவாதிகளை அனுப்பியது. இப்போது ஐநாவிற்கு சென்று இந்தியாவிற்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று பார்க்கிறது, என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Pakistan occupied Kashmir is our next aim says, Minister Rajnath Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X