டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்காக விடுத்த கோரிக்கையை புறக்கணித்த பாகிஸ்தான்.. இந்தியா கடும் வருத்தம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Pakistan Denies Airspace to Modi

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வி.வி.ஐ.பி விமானம் தனது வான்வெளி வழியாக ஜெர்மனி செல்ல பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. காஷ்மீரின் தற்போதைய நிலைமையை, இதற்கு காரணமாக மேற்கோளிட்டுள்ளது பாகிஸ்தான். இதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கான இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரிக்க முடிவு செய்துள்ளது என்று அந்த நாட்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

     Pakistan refused Narendra Modis flight to use its airspace

    வான்வழிப் பயணம் மறுக்கப்படுவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குரேஷி தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ கூறுகிறது.

    ஐ.நா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 அன்று அமெரிக்கா செல்லவுள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையிலும் அவர் உரையாற்றவுள்ளார். ஜெர்மனி வழியாக இந்த விமானம் பயணிக்கிறது. பாகிஸ்தான் வான் எல்லை வழியாக ஜெர்மனி செல்வது எளிதான வழி என்பதால், இந்திய தரப்பு இந்த அனுமதியை கேட்டிருந்தது.

    நீச்சல் குளமாக மாறிய சென்னை சாலைகள்.. பெரும் டிராபிக் ஜாமுக்கு ரெடியா போங்க மக்களே.. #chennairainsநீச்சல் குளமாக மாறிய சென்னை சாலைகள்.. பெரும் டிராபிக் ஜாமுக்கு ரெடியா போங்க மக்களே.. #chennairains

    "வி.வி.ஐ.பி சிறப்பு விமானத்திற்கான பயணத்தை இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக மறுக்க பாகிஸ்தான் அரசு எந்த இந்த முடிவுக்கு வருந்துகிறோம், இது எந்தவொரு சாதாரண நாட்டினாலும் வழக்கமாக வழங்கப்படும் அனுமதிதான், " என்று வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஐஸ்லாந்த் பயணம் மேற்கொண்டபோது, பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியாவிடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துவிட்டது. காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக கூறி இந்த முடிவுக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்தார்.

    English summary
    Pakistan has refused to allow Prime Minister Narendra Modi's VVIP flight to Germany via his airspace. Pakistan has cited the current state of Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X