டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்.. பயங்கரவாதிகளை சந்தித்த பாக். உளவு துறை

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் 'பேட்' படையினர் ஊடுருவல்.. இந்திய ராணுவம் முறியடிப்பு.. வீடியோ

    டெல்லி: உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்பும் முயற்சியாக இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் காஷ்மீரில் புதியதொரு தாக்குதலை நடத்துவதற்காக திட்டமிட பயங்கரவாத அமைப்புகளிடம் பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காஷ்மீருக்கு 70 ஆண்டுகள் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் இதை எதிர்த்த பாகிஸ்தான், உலக நாடுகளின் ஆதரவை நாடியது.

    Pakistans ISI meets terror groups to attack across India

    ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்ற பாகிஸ்தான், முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வந்தது. இதனால் இந்தியா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. இதன் எதிரொலியாக இந்தியா மீது போர் மூளும் என பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கைவிடுத்துவிட்டு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

    இந்த நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய உளவு துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஜெய்ஷ் இ முகமது, லக்ஷர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், காலிஸ்தானி ஜிந்தாபாத் அமைப்பு ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ எனப்படும் உளவு அமைப்பானது இஸ்லாமாபாத்தில் ரகிசய ஆலோசனை நடத்தியது.

    அந்த ஆலோசனையில் இந்தியாவின் சில பகுதிகளிலும் ஜம்மு காஷ்மீரிலும் புதிய தாக்குதல்களை நடத்தலாம் என முடிவு செய்துள்ளதாக இந்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    English summary
    Pakistan's Intelligence unit meets with terror groups to frame a strategy to do fresh attacks in Kashmir and some parts of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X