டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவின் 2-வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்?- வீடியோ

    டெல்லி: இந்தியாவின் 2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாகிஸ்தான் வெளியிடலாமே என இந்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக அத்தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் தனது எஃப் 16 ரக விமானங்களை இந்தியா வான்வெளியில் பறக்கவிட்டது. இதையடுத்து அந்த விமானங்களை துரத்தி கொண்டு இந்தியாவின் மிக் ரக விமானங்கள் சென்றன.

    ரபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பி கொடுத்துட்டார் பாருங்களேன்.. ப.சிதம்பரம் செம கிண்டல் ரபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பி கொடுத்துட்டார் பாருங்களேன்.. ப.சிதம்பரம் செம கிண்டல்

    விடுவிப்பு

    விடுவிப்பு

    அப்போது மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டதில் அந்த விமானம் அந்நாட்டு எல்லையில் விழுந்தது. இதையடுத்து அதிலிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டு உலக நாடுகளின் கண்டனத்தை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

    மறுப்பு

    மறுப்பு

    இந்த நிலையில் இந்தியாவின் இன்னொரு போர் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பிலிம் காட்டி வருகிறது. இதை இந்திய அரசு மறுத்துள்ளது.

    ஆதாரம் எங்கே?

    ஆதாரம் எங்கே?

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறுகையில் இந்தியாவின் 2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாகிஸ்தான் வெளியிடலாமே.போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தால் அதற்கான ஆதாரங்களை சர்வதேச ஊடகங்களில் ஏன் வெளியிடவில்லை?

    நடவடிக்கை

    நடவடிக்கை

    எஃப் 16 ரக விமானங்களை பாகிஸ்தான் குவித்தது. அதில் ஒன்றை வீழ்த்திவிட்டதற்கான ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது. புதிய பாகிஸ்தானை உருவாக்கிவிட்டதாக கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு கேள்வி

    பாகிஸ்தானுக்கு கேள்வி

    புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பே காரணம் என பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தாக்குதல் நடத்தியதை ஜெய்ஷ் இ முகமது அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறதா என ரவீஸ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Ministry of External affairs's spokesperson Raveesh kumar says that Naya Pakistan should show naya action against terrorism in their soil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X