டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கதான் காரணம்.. திடீர் குற்றச்சாட்டு.. இந்திய துணை தூதரை அழைத்து கண்டித்த பாகிஸ்தான்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக திடீரென குற்றம்சாட்டி, இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன் அனுப்பி, பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் போர்நிறுத்த மீறல்கள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் ஒரு மூலோபாய தவறான கணக்கீட்டிற்கு வழிவகுக்கும்

Pakistan summons Indian diplomat over ceasefire violations

துப்பாக்கிச் சூட்டில் அப்துல் ஜலீல் மற்றும் மூன்று வயது சிறுமி என இருவர் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்தியாவோ, பாகிஸ்தான் ராணுவம் இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், மோட்டார் குண்டுகள் மற்றும் சிறிய ஆயுதங்களுடன் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக, ஜம்முவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மாலை 6.30 மணியளவில் தொடங்கி இரவு 8:00 மணிக்கு முடிவடைந்தது என்றும் அவர் கூறினார். இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. ஆனால், செய்வதெல்லாம் செய்துவிட்டு, இந்திய துணை தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
Pakistan on Wednesday summoned India's Deputy High Commissioner Gaurav Ahluwalia and condemned the alleged ceasefire violations by Indian troops along the Line of Control (LoC) that killed two persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X