தலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது!
டெல்லி: டெல்லியில் கான் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷங்களை எழுப்பிய 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.

தலைநகர் டெல்லியில் கான் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் 2 ஆண்கள், 3 பெண்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷங்களை எழுப்பியதால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக துக்ளக் சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய 3 பெண்கள் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இந்தியா கேட் பகுதியை சுற்றிப்பார்க்க மோட்டார் சைக்கிளிகளில் டெல்லிக்கு வந்ததாக கூறினார்கள். அவர்கள் மோட்டார்சைக்கிளில் பந்தயத்தைத் தொடங்கி உள்ளனர்.
சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு!
அப்போது அனைவரையும் தங்கள் நாடுகளின் பெயரால் அழைக்க வேண்டும் என்று விதியை வகுத்ததாகவும், அதில் ஒரு பாகிஸ்தானியர் இருந்த நிலையில், போட்டியில் அவரது வெற்றியைக் குறிக்கும் விதமாக பாகிஸ்தான் ஜிந்தாபாத்தை கூறியதாகத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.