டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிடிபட்ட இந்திய விமானியை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்துங்கள்.. பாகிஸ்தானியர்கள் கோரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய விமானியை மரியாதையாக நடத்துங்கள்.. பாகிஸ்தானில் வலுக்கும் கோரிக்கை

    டெல்லி: பிடிபட்டுள்ள இந்திய விமானியை பாகிஸ்தான் மரியாதையாக நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் ஃபாத்திமா பூட்டோ உள்பட பாகிஸ்தானியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

    அப்போது நடந்த சண்டையின்போது இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த விமானத்தின் விமானி அபிநந்தனை அந்நாடு பிடித்து வைத்துள்ளது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    அவர் தங்களிடம் உள்ளதாக ஒரு வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அவரை கட்டி வைத்து முட்டி போட வைத்து, கண்களும் கட்டப்பட்டுள்ளது. ஒரு இந்திய விமானியை ஏதோ தீவிரவாதியை நடத்துவது போல் பாகிஸ்தான் நடத்தியுள்ளது வேதனையை அளிக்கிறது.

    வீடியோ

    வீடியோ

    இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அந்தநாட்டினரே கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் ஃபாத்திமா பூட்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்திய விமானி பிடிப்பட்டதை தைரியமாகவும் ஒளிவு மறைவின்றி பாகிஸ்தான் வீடியோ வெளியிட்டதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    கண்ணியம்

    கண்ணியம்

    அதே வேளை அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் கஸ்டடியில் உள்ள இந்திய விமானியை மரியாதையாக நடத்த வேண்டும் என பாகிஸ்தானியர்கள் குரல் கொடுத்து வருவதை கவனத்தில் கொள்ளுங்கள். போரே வேண்டாம் என கருதும் நாம் அனைவரையும் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    அதுபோல் பத்திரிகையாளர் மன்சூர் அலிகான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் பணியில் இருக்கும் விமானிக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். பிடிப்பட்ட இந்திய விமானியை மரியாதையாக நடத்த வேண்டும். வீரத்துக்கு மதிப்பு கொடுக்கும் நாடு நமது பாகிஸ்தான் ஆகும் என கூறியுள்ளார்.

    பணி

    பணி

    இதுகுறித்து ஹாசன் ஹுசைன் குரேஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பிடிப்பட்ட இந்திய விமானிக்கு சிறந்த மருத்துவ உதவி, உணவு வழங்கப்பட வேண்டும். அவரை மரியாதையாகவும் கவுரவமாகவும் நடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அவருக்கு கொடுத்த பணியை செய்தார் அவ்வளவே என குரேஷி தெரிவித்துள்ளார்.

    இந்திய போர்க் கைதியை மோசமாக நடத்தும் பாகிஸ்தான்! ஜெனிவா உடன்படிக்கை சொல்வது என்ன தெரியுமா? இந்திய போர்க் கைதியை மோசமாக நடத்தும் பாகிஸ்தான்! ஜெனிவா உடன்படிக்கை சொல்வது என்ன தெரியுமா?

    English summary
    Former Pakistani Prime Minister Benazir Bhutto’s niece, Fatima Bhutto, took to Twitter praying that the pilot be treated with respect.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X