டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்

Google Oneindia Tamil News

Recommended Video

    கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்- வீடியோ

    டெல்லி: தமிழ் வாழ்க என்று கூறி தமிழக எம்பிக்கள் பலர் பதவியேற்றுக் கொண்ட போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர். அவர்களை இந்தியாவும் வாழ்க என கூறி பாரிவேந்தர் சாந்தப்படுத்தினார்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.

    நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். முதலில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்ற போது தமிழிலேயே பதவியேற்றார்.

    தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் !தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் !

    தொகுதி வரிசைபடி

    தொகுதி வரிசைபடி

    அப்போது மேஜையை தட்டி தமிழக எம்பிக்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் முதல் தமிழக எம்பிக்கள் தொகுதி வரிசையின்படி பதவியேற்றுக் கொண்டனர்.

    கூச்சல்

    கூச்சல்

    அவர்களும் தமிழிலேயே பதவியேற்றனர். தமிழ் வாழ்க என ஒவ்வொருவரும் கோஷமிட்டனர். அப்போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என பதில் முழக்கமிட்டதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுக எம்எல்ஏ சண்முகசுந்தரம் மூன்று முறை தமிழ் வாழ்க என கூறியதால் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர்.

    பாஜக எம்பிக்கள்

    பாஜக எம்பிக்கள்

    இதைத் தொடர்ந்து பெரம்பலூர் தொகுதி எம்பியாக பாரிவேந்தர் பதவியேற்க வந்தார். அப்போது பாரிவேந்தர் தமிழ் வாழ்க இந்தியாவும் வாழ்க என கூறினார். இதன் மூலம் பாஜக எம்பிக்கள் சற்று சாந்தமடைந்தனர்.

    லோக்சபாவில் பரபரப்பு

    லோக்சபாவில் பரபரப்பு

    எனினும் அடுத்தடுத்து வந்தோர் தமிழ் வாழ்க என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டதுடன் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அவர்களை இடைக்கால சபாநாயகர் எச்சரித்தார்.

    English summary
    IJK party President and Perambalur MP Parivendhar took oath and says that India too live long and cools down BJP MPs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X