டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக வந்த கார்.. ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரிகள்.. பஞ்சர் செய்த ஸ்பைக்ஸ்.. நாடாளுமன்றத்தில் பரபர!

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஒருவரின் கார் ஒன்று பாதுகாப்பு காரணங்களால் பஞ்சர் ஆக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாடாளுமன்றம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக எம்பிக்கள் வந்தனர். அப்போது பாஜக எம்பி வினோத் குமார் சோன்கரின் கார் தடுப்பு சுவர் அருகே பஞ்சர் செய்யப்பட்டது. தடுப்பு சுவர் அருகே இருக்கும் ஸ்பைக்ஸ் கருவிகள் மூலம் இந்த கார் பஞ்சர் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த முழு விவரம் வெளியாகி உள்ளது. நாடளுமன்றத்தில் கேட் எண் 1ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு கருதி நாடாளுமன்றத்தில் நுழைவாயில் அனைத்திலும் பேரிகேட் தடுப்பு சுவர்கள் இருக்கும்.

பாராமரிப்பு பணி.. திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம்பாராமரிப்பு பணி.. திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம்

என்ன செய்யும்

என்ன செய்யும்

இதில் நவீன சென்சார் கருவிகள் இருக்கும். யாராவது வாகனத்தை கொண்டு இந்த தடுப்பு சுவர்களை மோதினால் ஸ்பைக்ஸ் எனப்படும் முற் கம்பிகள் தரையில் இருந்து மேலே வரும். தடுப்பு சுவர்களை இடித்துவிட்டு வேகமாக செல்லும் வாகனங்களை பஞ்சர் ஆக்கும் விதமாக இந்த இரும்பு கம்பிகள் முற்கள் போல மேலே வருவது வழக்கம். பாதுகாப்பு கருதி இந்த நவீன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக்காக இந்த ஸ்பைக்ஸ் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக பாஜக எம்பி வினோத் குமார் சோன்கர் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவர் வரும் போது கேட் எண் 1 வழியாக உள்ளே நுழைந்தார். அதே நேரம் இன்னொரு கார் கேட் எண் 1ல் வெளியே செல்லும் வழியில், வெளியே சென்று கொண்டு இருந்தது.

தவறுதலாக கார்

தவறுதலாக கார்

அந்த கார் தவறுவதாக வேகமாக சென்று, பேரிகேட் தடுப்பு சுவர்களில் மோதியது. டிரைவர் செய்த தவறால் இப்படி நடந்தது. இதனால் அங்கே இருக்கும் சென்சார் உடனே ஆக்டிவேட் ஆனது. அனைத்து கேட் பகுதியிலும், உடனே பாதுகாப்பு சிக்னல் சென்றது. இதனால் உடனே அங்கிருந்த ஸ்பைக்ஸ் எல்லாம் மேலே வந்தது. இதில் சரியாக பாஜக எம்பி வினோத் குமாரின் கார் சிக்கியது.

டயர்கள்

டயர்கள்

இதில் அவரின் கார் டயர்கள் மொத்தமாக பஞ்சர் ஆனது. தற்போது இதை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் அனைத்து கேட் பகுதிகளிலும் எமெர்ஜென்சி அலார்ம் அடிக்க தொடங்கியது. இதனால் பாதுகாப்பு படையினர் அனைத்து பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

எல்லா கேட் பகுதியிலும் கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தையும் முழுமையாக சோதித்து வருகிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் பேரிகேட் தடுப்பு மீது மோதிய இன்னொரு வாகனத்தின் ஓட்டுநர் மீது விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இதேபோல் கடந்த வருடம் தவறுதலாக ஒரு கார் நாடாளுமன்ற பேரிகேட் சுவரில் மோதியது குறிப்பிடத்தக்கது.

English summary
Parliament security on high alert after a BJP MP's car got punctured as spikes came up after a breach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X