டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18-ல் தொடங்குகிறது.. கடந்த முறை 36.. இந்தமுறை எத்தனையோ!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 18 முதல் டிசம்வர் 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும தேதிகளை இறுதி செய்வதற்காக அமைச்சரவை குழு டெல்லியில் கூடியது.

parliament winter session 2019: Next session of Parliament will be from November 18 till December 13

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ஆதரவா? மலேசியா, துருக்கியை பகைக்கும் இந்தியா.. உறவில் ஏற்படும் பெரும் விரிசல்!பாகிஸ்தானுக்கு ஆதரவா? மலேசியா, துருக்கியை பகைக்கும் இந்தியா.. உறவில் ஏற்படும் பெரும் விரிசல்!

இதன்படி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற போது கூடிய முதல் கூட்டத்தொடரில் முத்தலாக், மோட்டார் வாகன சட்டம், ஊபா, காஷ்மீர் 370 வது பிரிவு ரத்து உள்பட 36 மசோதாக்கள் நிறைவேற்றியது. இந்நிலையில் குளிர்காலக் கூட்டத் தொடரிலும் நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

English summary
Next session of Parliament will be from November 18 till December 13. Ministry of Parliamentary Affairs communicated to the secretariats of both Houses of Parliament in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X