டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விறுவிறுப்பான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று அவையில் என்ன நடக்கும்?.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டு நாட்களாக பெரிய அளவில் அமளி நடந்து வரும் நிலையில் இன்று கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முதல்நாள் வேளாண் சட்டங்கள் மூன்றாம் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. விவாதம் எதுவும் இன்றி இரண்டு அவைகளிலும் மசோதாக்கள் செய்யப்பட்டு நிறைவேற்றபட்டது.

அதேபோல் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுப்பட்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று என்னென்ன மசோதாக்கள் தாக்கலாகும்.. முழு விபரம்! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று என்னென்ன மசோதாக்கள் தாக்கலாகும்.. முழு விபரம்!

அமளி

அமளி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுப்பட்டனர். நேற்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இதனால் ஸ்தம்பித்தது. 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ராஜ்ய சபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.

லோக்சபா

லோக்சபா

இதனால் இன்றும் அவையில் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று லோக்சபாவில் ஓடிடி தளங்களில் வரக்கூடிய விளம்பரங்கள் குறித்து கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பப்பட உள்ளது. இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) மூலம் இந்த விளம்பரங்கள் கண்காணிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட உள்ளது. அதேபோல் மத்திய அரசு நிலக்கரி இருப்பு குறித்து கவனம் கொள்கிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட உள்ளது.

நிலக்கரி

நிலக்கரி

கடந்த மாதம் இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நிலக்கரி கையிருப்பு குறித்து முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்பட்டதா என்றும் கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பப்பட உள்ளது. அதேபோல் சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை களைய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது என்பது குறித்தும் கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பப்பட உள்ளது.

 ராஜ்ய சபா

ராஜ்ய சபா

இன்னொரு பக்கம் ராஜ்ய சபாவில் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியா கொண்டு வரப்பட்ட பல்வேறு செல்போன் சேவை நிறுத்தம் மற்றும் இணைய நிறுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பான தகவல் தொடர்பு அமைச்சகத்தின் நிலைக்குழு அறிக்கை இன்று வெளியாக உள்ளது. அதேபோல் அணை பாதுகாப்பு 2019 மசோதாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தாக்கல் செய்வார். இரண்டு நாட்களாக அமளி காரணமாக ராஜ்ய சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

English summary
Parliament Winter Session 3rd Day: What will happen today in both houses?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X