பெரும் அமளிக்கு இடையே.. இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற அவை.. இன்று அவையில் என்ன நடக்கும்?
டெல்லி: நாளுமன்றத்தில் பெரிய அமளி நடைபெற்று வரும் நிலையில் இன்று ராஜ்ய சபாவில் ஓபிசி பிரிவினரின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அமளியாக சென்று கொண்டு இருக்கிறது. வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து முதல் நாளில் இருந்தே அமளி நடைபெற்று வருகிறது.
இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்கட்சிகள் ஒருமித்த ஆதரவு அளித்து இருந்தாலும் இதற்கான மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல் குறைந்த பட்ச ஆதார விலை பற்றி பாஜக அரசு எதுவும் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் புகார் வைத்து உள்ளன.
இதற்காக எதிர்க்கட்சியினர் கடந்த மூன்று நாட்களாக அவையில் அமளியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதேபோல் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுப்பட்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுப்பட்டன. 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதனால் இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஸ்தம்பித்தது. இந்த நிலையில் அமளிக்கு இடையில் இன்று அவை மீண்டும் கூட உள்ளது. நேற்று குழந்தை பிறப்பு தொழில்நுட்பம், பாதுகாப்பு, நடவடிக்கைகள் தொடர்பான மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார்.
லோக்சபா
இன்று லோக்சபா கூட்டத்தில் சமூக நீதிக்கான 26வது நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோல் உரத்துறை மற்றும் வேதியியல் துறை சார்பாக அறிக்கையும் இன்று அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ராஜ்யசபா
அதேபோல் அணை பாதுகாப்பு 2019 மசோதாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தாக்கல் செய்வார். இரண்டு நாட்களாக அமளி காரணமாக ராஜ்ய சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இன்று ராஜ்ய சபாவில் ஓபிசி பிரிவினரின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.