டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வதந்திகளை பரப்ப வேண்டாம்.. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது.. ராஜ்யசபாவில் அமித் ஷா பேச்சு!

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது, எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளை முடிந்தால் நிரூபியுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது, எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளை முடிந்தால் நிரூபியுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் பேசியுள்ளார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று முதல்நாள் பிரதமர் மோடி இந்த கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் பேசினார்.

இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் பேசினார். இந்த நிலையில் ராஜ்ய சபாவில் காஷ்மீர் பிரச்சனை எழுப்பப்பட்டது. காஷ்மீரில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அங்கு இயல்புநிலை திரும்பவில்லை, அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் முடக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ், திமுக எம்பிக்கள் குரல் எழுப்பினார்கள்.

ரஜினியுடன் சேருவது நல்லதா? வொர்க் அவுட் ஆகுமா? மநீம நிர்வாகிகளுடன் கமல் தீவிர ஆலோசனை!ரஜினியுடன் சேருவது நல்லதா? வொர்க் அவுட் ஆகுமா? மநீம நிர்வாகிகளுடன் கமல் தீவிர ஆலோசனை!

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு பதில் அளித்து ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீரில் இயல்பு நிலை நிகழ்ந்து வருகிறது. ஆனாலும் மக்கள் பதற்றத்துடன்தான் இருக்கிறார்கள். காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள், ஊடுருவல் அச்சம் இருப்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மற்றபடி பிரச்சனை இல்லை.

இணையம் எப்படி

இணையம் எப்படி

காஷ்மீரில் விரைவில் இணையம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும். ஜம்மு காஷ்மீர் பத்திரிக்கைகள் வெளியாகிறது, டிவி சேனல்கள் இயங்கி வருகிறது, வங்கிகள் இயங்கி வருகிறது. அங்கு நல்ல சூழ்நிலைதான் நிலவி வருகிறது.

படிப்பு

படிப்பு

பள்ளிகள், கல்லூரிகள் திறந்துதான் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இயல்பு வாழ்க்கை முடிந்த அளவு எவ்வளவு சீராகுமோ அவ்வளவு சீராகி உள்ளது. பள்ளிகள், கல்லூரிகளின் வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இணையம் இந்த காலத்தில் மிகவும் முக்கியம்தான். ஆனால் தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இணைய வசதி ஏற்படுத்தப்படவில்லை. இணையத்தை விட பாதுகாப்புதான் முக்கியம். ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்காகத்தான் அங்கு இணையம் துண்டிக்கப்பட்டு உள்ளது, என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

ஆனால் இதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. முக்கியமாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இதற்கு எதிர்வாதம் செய்தார். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை. அங்கு மக்கள் உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

தவறு என்றால் நிரூபியுங்கள்

தவறு என்றால் நிரூபியுங்கள்

இதற்கு மீண்டும் பதில் அளித்த அமித் ஷா, காஷ்மீரில் கடைகள் திறந்துள்ளது. அங்கு பெட்ரோல் டீசல் கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சி முடிந்தால் நான் சொல்வது தவறு என்று நிரூபிக்கட்டும். முடிந்தால் காங்கிரஸ் கட்சி ஆதாரங்களை சமர்பிக்கட்டும் என்று குறிப்பிட்டார்.

English summary
Parliament winter session: Kashmir back to normal, don't trust rumors says Union Minister Amit Shah in Rajya Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X