டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்றங்களை ஏற்று மக்கள் பயணிக்க வேண்டும்... ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அதிரடி உரை!

நடந்து வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் ராஜ்ய சபாவில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Parliament Winter Session begins today | தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

    டெல்லி: நாட்டில் நடக்கும் மாற்றங்களை ஏற்று மக்கள் பயணிக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. பல்வேறு மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் பல முக்கிய சட்டங்கள், திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றில் இருந்து டிசம்பர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று ராஜ்ய சபாவின் 250 அமர்வு நடைபெறுகிறது. இதனால் இன்று நடக்கும் அமர்வில் பிரதமர் மோடி பேசினார்.

    ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கிறார் பொன்.ராதா... ஆர்.எஸ்.பாரதி எம்.பி. விமர்சனம்ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கிறார் பொன்.ராதா... ஆர்.எஸ்.பாரதி எம்.பி. விமர்சனம்

    உரை நிகழ்த்தினார்

    உரை நிகழ்த்தினார்

    ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி தனது உரையில், ராஜ்ய சபாவின் 250வது கூட்டத்தொடரில் பேசுவது சந்தோசம் அளிக்கிறது.இந்த அவைக்கு வந்திருக்கும் அனைத்து எம்பிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க அவையில் பேசுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது

    மக்களவை எப்படி

    மக்களவை எப்படி

    இந்திய ஜனநாயகத்தில் மக்களவைக்கு பெரிய பங்கு உள்ளது. இங்கு பல வரலாறு நிகழ்ந்து இருக்கிறது, இன்னும் பல வரலாறு நிகழும்.தொலைநோக்கு பார்வையுடன் ராஜ்யசபா செயல்பட்டு இருக்கிறது.இந்திய ஜனநாயகத்தின் இதயமாக ராஜ்ய சபா செயல்பட்டு வருகிறது

    நிலைத்து நிற்கும்

    நிலைத்து நிற்கும்

    ராஜ்யசபா எப்போதும் நிலைத்து இருக்க கூடியது. இதற்கு முடிவே கிடையாது. மக்கள் நாட்டில் நடக்கும் மாற்றங்களை ஏற்க வேண்டும். மாற்றங்களை ஏற்று மக்கள் அதனுடன் பயணிக்க வேண்டும்.ராஜ்யசபாவின் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. ஒன்று இது நிலவியது.

    பன்முக தன்மை

    பன்முக தன்மை

    இன்னொன்று இந்தியாவின் பன்முக தன்மைக்கு ராஜ்ய சபாதான் எப்போது உதவுகிறது. மாநிலங்களுக்கு உதவ, மாநிலத்தின் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இந்த அவை இருக்கிறது. லோக்சபா ஒரு நாள் முடியலாம். ஆனால் ராஜ்யசபா முடியாது. அது பரந்துபட்டது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Parliament winter session: PM Modi to speak in the Rajya Sabha in a few minutes today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X