டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி அவையில் புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளது காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட கட்சிகள்.

இதனிடையே மக்களவை கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆதாராளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி!ஆதாராளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

17-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடர் நாளை காலை தொடங்கவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தி முடிப்பதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து அவையில் புயலை கிளப்ப காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனை எதிர்கொள்ள அரசு தரப்பும் தயாராக உள்ளது.

சுமூகமாக

சுமூகமாக

குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இருக்கை மாற்றம்

இருக்கை மாற்றம்

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா இப்போது சிலுப்பிக்கொண்டு நிற்பதால், மக்களவையில் சிவசேனா எம்.பி.க்களுக்கான இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் நாடாளுமன்ற அலுவல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
parliament winter session will start from tomorrow onwards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X